அஸ்வினை தட்டிச் சென்ற டெல்லி... பஞ்சாப் அணிக்கு குட்பை...!

அஸ்வினை தட்டிச் சென்ற டெல்லி... பஞ்சாப் அணிக்கு குட்பை...!
ரவிசந்திரன் அஸ்வின்
  • Share this:
பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ரவிசந்திரன் அஸ்வினை டெல்லி அணி வாங்கி உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் கடந்த 2 வருடங்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தவர் அஸ்வின். அவர் தலைமையில் 28 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் 12 வெற்றிகளும், 16 தோல்விகளும் அடைந்துள்ளது. மேலும் அஸ்வின் தலைமையில் அந்த அணி ஃபளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

இதன் காரணமாக இந்த வருடம் புதிய பயிற்சியாளர், புதிய கேப்டன் என அனைத்திலும் மாற்றம் கொண்டுவர அணியின் உரிமையாளர்கள் முடிவெடுத்தனர். பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பளே நியமிக்கப்பட்டார்.


கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்க முடிவெடுத்தனர். அஸ்வினை தங்களது அணியிலிருந்து விடுவிக்கவும் முடிவெடுத்தனர். அனில் கும்பளே இந்த விவகாரத்தில் அஸ்வினை பஞ்சாப் அணியில் தக்க வைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அந்த முடிவை அந்த அணி நிர்வாகம் கைவிட்டது.

ஆனால் தற்போது அஸ்வினை டெல்லி அணிக்கு விலை பேசி ஒரு டீலையும் முடித்துள்ளது பஞ்சாப் அணி. அதன்படி ரூ.1.5 கோடி மற்றும் ஜகதீஷா சுச்சித் என்ற உள்ளூர் வீரரையும் கொடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி அஸ்வினை தங்களது அணிக்கு வாங்கி உள்ளது.
First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading