ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சாதனை படிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் விறுவிறு முன்னேற்றம்

சாதனை படிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் விறுவிறு முன்னேற்றம்

Ravichandran Ashwin

Ravichandran Ashwin

35 வயதாகும் அஸ்வின், தனது 80வது போட்டியில் 418 விக்கெட்களை வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் மேலும் ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 296 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 237 (7) ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இன்று கடைசி நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டாம் லாதம் மற்றும் வில் யங்கை ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட்டாக்கினார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் டாம் ப்ளண்டலை போல்டாக்கினார். இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய  வீரர்களின் வரிசையில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின்.

35 வயதாகும் அஸ்வின், தனது 80வது போட்டியில் 418 விக்கெட்களை வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார். ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்.

Also read:  பந்து வீச்சு சர்ச்சை: அஸ்வின் - அம்பயர் வாக்குவாதம்

அஸ்வினுக்கு முன்னதாக தற்போது ஜாம்பவான்களான அனில் கும்பிளேவும், கபில் தேவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அனில் கும்பிளே 132 போட்டிகளில் 619 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்திலும், கபில் தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்கள் வீழ்த்தி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

இஷாந்த் சர்மா (311), ஜாகீர் கான் (311), பிஷன் சிங் பேடி (266), பக்வத் சந்திரசேகர் (242), ஜவகல் ஸ்ரீநாத் (236) மற்றும் ரவீந்திர ஜடேஜா (228) ஆகியோர் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் டாட் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர்.

இதனிடையே, 284 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிவந்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 105 ரன்களு,ம், இரண்டாம் இன்னிங்ஸில் 65 ரன்களும் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

Published by:Arun
First published:

Tags: Cricket, India vs New Zealand, R Ashwin