ஐபிஎல்: டெல்லி அணிக்கு கைமாறும் ரவிச்சந்திரன் அஸ்வின்!

IPL 2020 | Ravichandran Ashwin | அஸ்வினை பஞ்சாப் அணி விடுவிக்க முடிவெடுத்துள்ளதால் டெல்லி அணி அஸ்வினை வாங்க ஆர்வம் காட்டி உள்ளது.

Vijay R | news18-tamil
Updated: September 4, 2019, 7:26 PM IST
ஐபிஎல்: டெல்லி அணிக்கு கைமாறும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
ரவிசந்திரன் அஸ்வின்
Vijay R | news18-tamil
Updated: September 4, 2019, 7:26 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினை வெளியேற்ற அந்த அணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் கடந்த இரண்டு வருடங்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ரவிசந்திரன் அஸ்வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணி 28 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 12 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதனால் அணியில் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர அணியின் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.


பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மைக் ஹஸ்ஸனை நீக்கினர். புதிய கேப்டனை நியமனம் செய்யவும் முடிவு எடுத்துள்ளனர். அதன்படி கே.எல்.ராகுல் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வினை பஞ்சாப் அணி விடுவிக்க முடிவெடுத்துள்ளதால் டெல்லி அணி அஸ்வினை வாங்க ஆர்வம் காட்டி உள்ளது. சன் ரைசர்ஸ் அணியும் ஆர்வம் காட்டிய போதும் டெல்லி அணிக்கு சிறந்த ஆல்-ரவுண்டர் தேவைப்படுவதால் அந்த அணி, அஸ்வினை பஞ்சாப் அணி ஏலம் எடுத்த தொகை கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அஸ்வினை பஞ்சாப் அணி 7.6 கொடுத்து ஏலத்திற்கு எடுத்தது. டெல்லி அணிக்கு அஸ்வின் தேர்வாகி உள்ளது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

Also Watch :  குழந்தைகள் காப்பகமா...? விற்பனை மையமா?

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...