இங்கிலாந்து புறப்படுகிறார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின்!

கவுண்டி கிரிக்கெட்டில் வொர் செஸ்டர்ஷைர் அணிக்காக அஸ்வின் 4 போட்டிகளில் விளையாடினர்.

Vijay R | news18
Updated: May 26, 2019, 9:08 PM IST
இங்கிலாந்து புறப்படுகிறார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின்!
ரவிசந்திரன் அஸ்வின்
Vijay R | news18
Updated: May 26, 2019, 9:08 PM IST
உலகக் கோப்பை பயிற்சிஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் விரைவில் இங்கிலாந்து புறப்பட உள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்தில் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் நாட்டிங்ஹாம் டிரிங் அணிக்காக விளையாடுவதற்காக அஸ்வின் ஒப்பந்தமாகி உள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடைப்பெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் வொர் செஸ்டர்ஷைர் அணிக்காக அஸ்வின் 4 போட்டிகளில் விளையாடினர். 4 போட்டியில் விளையாடி அஸ்வின் 20 விக்கெட்களை வீழ்த்தினார். கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் தற்போது நாட்டிங்ஹாம் டிரிங் அணிக்காக விளையாட விரைவில் இங்கிலாந்து புறப்பட உள்ளார்.

Also Read :இந்தியாவிற்கு எதிரான வரலாற்றை மாற்றிக்கட்டுவோம்! இன்சமாம்-உல்-ஹக் உறுதி

Also Read :20 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்: மறக்கமுடியாத டிராவிட் – கங்குலியின் வரலாற்று சாதனை!

Also Read :‘தோனி’ என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்! வைரலாகும் வீடியோ
Loading...
Also Read :இங்கிலாந்து மைதானத்திலேயே அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர்!

Also Watch

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...