நான் கிரிக்கெட் வீரர் ஆனது ஒரு விபத்து; லாக் டவுனுக்கு பிறகு தான் எல்லாமே நடந்தது - ரவிச்சந்திரன் அஸ்வின்

நான் கிரிக்கெட் வீரர் ஆனது ஒரு விபத்து; லாக் டவுனுக்கு பிறகு தான் எல்லாமே நடந்தது  - ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

bcci.tv இணையதளத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாக பல நினைவுகளை அசைபோட்டுள்ளார்.

  • Share this:
நான் கிரிக்கெட் வீரர் ஆனது ஒரு விபத்து என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விராட் கோலியால் நவீன காலத்திய ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் சென்னையைச் சேர்ந்தவரான ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை அஸ்வின் படைத்தார். இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்த 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 7 விக்கெட்களை வீழ்த்தினார், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவரின் விக்கெட் எண்ணிக்கையை 401 ஆக உயர்த்தினார். மேலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதிலும் பெரும் பங்காற்றியவர் அஸ்வின்.

bcci.tv இணையதளத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாக பல நினைவுகளை அசைபோட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்


“நான் தற்செயலாக ஒரு கிரிக்கெட் வீரர் ஆனேன். நான் உண்மையில் ஒரு கிரிக்கெட் காதலன். நான் இங்கே என் கனவை வாழ்கிறேன், நான் ஒரு நாள் இந்திய ஜெர்சியை அணிவேன், விளையாடுவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை” என்று அஸ்வின் தெரிவித்தார். ஆனால் அது குறித்து அவர் விரிவாக பேசவில்லை.

தொடர்ந்து அவர் பேசும் போது, இந்திய அணிக்காக விளையாடுவதில் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்காரனாக இருக்கிறேன் என்பதை கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் தான் உணர்ந்ததாக குறிப்பிட்டார்.

ஒவ்வொரு போட்டியில் விளையாடி முடிக்கும் போதும், அதில் அணியின் வெற்றிக்கான பங்களிப்பை அளிக்கும் போதும் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என அஸ்வின் கூறினார்.

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா சென்று விளையாடுவேன் என எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் நான் சொன்னேன், எல்லாமே ஒரு பரிசாக இருந்தன, விளையாட்டின் மீதான காதல் காரணமாக விளையாடி வருகிறேன், விளையாட்டு எனக்கு போதுமான மற்றும் அதிகமான பரிசுகளைத் தருகிறது எனவும் அவர் கூறினார்.

ஊரடங்கு காலத்தில் விளையாட்டு குறித்த புரிந்துணர்வு ஒரு படி மேலும் அதிகரித்ததாகவும், இந்த நேரத்தில் யூடியூபில் பழைய கிரிக்கெட் வீடியோக்களை பார்த்ததாகவும் குறிப்பாக சென்னை மைதானத்தில் சச்சினின் சதம் எடுத்தது போன்ற வீடியோக்களை பார்த்த போது புரிந்துணர்வு அதிகரித்ததாகவும் கூறினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள் எடுத்த போது ஒட்டுமொத்த மைதானத்தில் இருந்தவர்களும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த உணர்வை விவரிக்க முடியாது. கடந்த 3 மாதகாலமும் ஒரு கனவை போல் உள்ளது என அஸ்வின் சிலாகித்து கூறினார்.

டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்களை அதிவேகமாக வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: