• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக அஸ்வின் காரணமா? - என்ன பிரச்னை?

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக அஸ்வின் காரணமா? - என்ன பிரச்னை?

virat kohli and ashwin

virat kohli and ashwin

விராட் கோலி குறித்து புகார் கூறிய அந்த மூத்த வீரர் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் என தகவல்கள் அடிபடுகின்றன.

  • Share this:
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக தமிழக வீரர் அஸ்வின் காரணமாக இருக்கலாம் என தகவல் பரவி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையே பிரச்னை வெடித்ததாகவும், இது குறித்து அஸ்வின், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரிடம் புகார் தெரிவித்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக நேரிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் அடிக்டர் வெப்தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தியின்படி, இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர், கேப்டன் விராட் கோலி தன்னை இந்திய அணியில் பாதுகாப்பற்றதாக உணர வைத்திருப்பதாக அவர் குறித்து பிசிசிஐ செயலாளரிடம் புகார் தெரிவித்திருப்பதாக ஐஏஎன்எஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதிய போது, போதிய உத்வேகத்துடன் விளையாடவில்லை என்னை கடிந்துகொண்டதாக அந்த மூத்த வீரர் விராட் கோலி குறித்து புகார் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விராட் கோலி குறித்து புகார் கூறிய அந்த மூத்த வீரர் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் என தகவல்கள் அடிபடுகின்றன.

Also Read:  வழிப்பறியில் ஈடுபட்டு வந்த முன்னாள் தேசிய சாம்பியன் கைது!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பின்னர் இங்கிலாந்துடன் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் உட்கார வைக்கப்பட்ட நிலையில் இந்த செய்தி சீரியசாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ashwin


எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் கேப்டன் கோலி, அஸ்வினுக்கு பதிலாக யுவேந்திர சாஹலை சேர்த்துக் கொள்ளவே ஆசைப்பட்டார் என சொல்லப்படுகிறது.

Also Read:  பவானிபூர் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்? – கொல்கதா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே யாரும் எதிர்பாராத விதமாக, உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஃபார்மேட்களில் கேப்டனாக தொடருவேன் என விளக்கமளித்திருந்தார்.

இதனிடையே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விரைவில் கோலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா புதிய கேப்டன் ஆக்கப்படுவார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: