ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

’அடேய் கேமராமேன்... இதெல்லாம் பாக்க மாட்டீயாடா’ - வீடியோவுக்கு அஷ்வின் போட்ட பதில் ட்வீட்!

’அடேய் கேமராமேன்... இதெல்லாம் பாக்க மாட்டீயாடா’ - வீடியோவுக்கு அஷ்வின் போட்ட பதில் ட்வீட்!

இந்திய வீரர் ரவி அஷ்வின்

இந்திய வீரர் ரவி அஷ்வின்

இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த அஷ்வின் கடைசியாக அந்த ஸ்வெட்டரில் என்ன நறுமணம் வீசுகிறது என்று பார்த்தேன். கண்டுபிடித்துவிட்டேன் என நகைச்சுவையாக பதிவிட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustralia

  இந்திய கடைசியாக டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. அப்போது ரோகித் ஷர்மா பேசும்போது வீடியோவின் பின்பக்கத்தில் அஷ்வினையும் சேர்த்து வீடியோவில் தெரியும்படி வீடியோவை எடுத்தார்.

  அப்போது அஷ்வின் தன்னுடைய ஸ்வெட்டர் (Sweater) எதுவென தெரியாமல் திணறினார். அதை கண்டுபிடிக்க அவர் அந்த ஸ்வெட்டரை நுகர்ந்து பார்த்து எது தன்னுடையது என கண்டுபிடித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  இதையும் படிக்க :  அரையிறுதி போட்டிக்கு முன் ரோஹித் சர்மாவிற்கு காயம்

  இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த், “இதை பல முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை இதை பார்க்கும் போதும் சிரிப்பு வருகிறது. அஷ்வின் அவர்களே உங்கள் ஸ்வெட்டரை எப்படி கண்டுபிடிப்பது என்று எங்களுக்கும் சொல்லிகொடுங்கள்” என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.

  இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த அஷ்வின், “முதலில் அந்த ஸ்வெட்டரின் அளவை பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அந்த ஸ்வெட்டரை துவைத்தார்களா? என்று பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக அந்த ஸ்வெட்டரில் என்ன நறுமணம் வீசுகிறது என்று பார்த்தேன். கண்டுபிடித்துவிட்டேன். அடேய் கேமராமேன்” என அதை வீடியோ எடுத்த கேமராமேனையும் திட்டி நகைச்சுவையாக பதிவிட்டார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: R Ashwin, T20 World Cup, Twitter