Home /News /sports /

நியூசிலாந்தின் ஆல் டைம் கிரேட் பவுலர் ரெக்கார்டை குறிவைக்கும் அஸ்வின்

நியூசிலாந்தின் ஆல் டைம் கிரேட் பவுலர் ரெக்கார்டை குறிவைக்கும் அஸ்வின்

Ravichandran Ashwin

Ravichandran Ashwin

அஸ்வின் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடி 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹேட்லியின் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள்தான் தேவை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நியூசிலாந்தின் ஆல் டைம் கிரேட் வேகப்பந்து வீச்சாளர் சர் ரிச்சர்ட் ஹாட்லி, இவரது சாதனையை முறியடிக்கும் ஒரு வாய்ப்பு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்குக் கிடைத்துள்ளது.

    கிரிக்கெட் பேட்டிங்கில் எப்படி டான் பிராட்மேனோ அது போல் ஸ்விங் பவுலிங் என்றால் ரிச்சர்ட் ஹாட்லி. இவர் காலத்தில் ஆஸ்திரேலியாவின் பெரிய பெரிய பேட்டர்களையெல்லாம் கதறவிட்டுள்ளார். ஒரு முறை 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் 33 விக்கெட்டுகளைச் சாய்த்தார், இவருக்கு அடுத்த பெரிய பவுலர் ஷேன் பாண்ட் தான், ஆனால் அவ்வளவாக நீண்ட காலம் ஆடவில்லை.

    நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீ இந்தியாவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    அஸ்வின் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடி 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹேட்லியின் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள்தான் தேவை. நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினால் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை முறியடிப்பார்.

    சுழற்பந்துவீச்சாளர் பிஷன்சிங் பேடி 12 டெஸ்ட்களில் 57 விக்கெட்டுகளையும், மேதை ஆஃப் ஸ்பின்னர் எராப்பள்ளி பிரசன்னா 10 டெஸ்ட்களில் 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக டிம் சவுதி 10 டெஸ்ட் களில் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் அஸ்வினை பிரசன்னாவுடனெல்லாம் கம்பேர் செய்ய கூடாது, எராப்பள்ளி பிரசன்ன கடினமான, ஸ்பின் எடுக்கவே எடுக்காத நியூசிலாந்தில் சென்று 8/76 என்ற அதிகபட்ச சிறந்த பவுலிங்கோடு அதிக விக்கெட்டுகளை அங்கேயே கைப்பற்றியுள்ளார்.

    Also Read: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்...- புஜாரா, ரஹானே குறித்து பயிற்சியாளர் ஓபன் டாக்

    நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. அதற்கான இந்திய அணி வருமாறு:

    ஷுப்மன் கில், புஜாரா, ஷ்ரேயஸ் அய்யர், விராட் கோலி, ரஹானே, சஹா/பரத், ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், சிராஜ், உமேஷ் யாதவ்
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs New Zealand, R Ashwin

    அடுத்த செய்தி