டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள் வீழ்த்திய இந்தியாவின் 4வது வீரரானார் சாதனை தமிழர் அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள் வீழ்த்திய இந்தியாவின் 4வது வீரரானார் சாதனை தமிழர் அஸ்வின்!

அஸ்வின்

அஸ்வினையும் சேர்த்து உலக அளவில் 400 விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் மொத்தம் 16 பேர் மட்டுமே.

  • Share this:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை அதிவேகமாக வீழ்த்திய இந்திய பவுலர் என்ற அரிய சாதனையை படைத்தார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியின் 2வது நாளான இன்று இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ், ஓலி போப் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள் வீழ்த்தி அரிய சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட் தான் அஸ்வினின் 400 வது விக்கெட்டாக அமைந்தது.

இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 4வதாக அஸ்வின் இணைந்தார். அவருக்கு முன்னதாக அனில் கும்பிளே (619), கபில் தேவ் (434) மற்றும் ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் உள்ளனர். இந்திய அளவில் அதிவேகமாக 400 விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற மகுடம் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

 77வது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கும் அஸ்வின் இந்த சாதனையை மிக விரைவாகவே படைத்துள்ளார். ஒட்டுமொத்த அளவில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுக்கு அடுத்ததாக விரைவாக 400 விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் அஸ்வின் 2ம் இடத்தில் உள்ளார். முரளிதரன் 72 போட்டிகளில் விளையாடி அச்சாதனையை படைத்திருக்கிறார்.

அஸ்வினையும் சேர்த்து உலக அளவில் 400 விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் மொத்தம் 16 பேர் மட்டுமே. 400 விக்கெட்கள் வீழ்த்தியதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் அஸ்வினை பாராட்டி உள்ளனர்.34 வயதாகும் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் கலக்கி இருக்கிறார். இப்போட்டியில் அவர் 23 விக்கெட்களை வீழ்த்தியிருப்பதுடன், 176 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்தியிருக்கும் அஸ்வின், ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 52 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 2010ல் அஸ்வின் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: