ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு அஷ்வின் பொருத்தமானவர்’ – பாக். முன்னாள் வீரர் கருத்து

‘இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு அஷ்வின் பொருத்தமானவர்’ – பாக். முன்னாள் வீரர் கருத்து

அஷ்வின்

அஷ்வின்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் எடுத்த 42 ரன்களை சதத்துடன் நாம் ஒப்பிட வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு ரவிச்சந்திரன் அஷ்வின் பொருத்தமானவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். அஷ்வினை சைன்டிஸ்ட் என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

2ஆவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன் 54 ரன்களை எடுத்தார். குறிப்பாக 2ஆவது இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ் உடன் இணைந்து அஷ்வின் அமைத்த பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெற்றிக்கு 145 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன்பின்னர் இணைந்த அஷ்வின் – ஷ்ரேயாஸ் இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.

2ஆவது டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என அனைத்து டிபார்ட்மென்ட்டிலும் அஷ்வின் ஜொலித்தார். இதனை பாராட்டியிருந்த முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சேவாக் அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அஷ்வினை பாராட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸி. பவுலர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு காயம்…

அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களில் அஷ்வினும் ஒருவர் என்று கருதுகிறேன்.

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் எடுத்த 42 ரன்களை சதத்துடன் நாம் ஒப்பிட வேண்டும். இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் அனில் கும்ப்ளேவைப் போன்றவர் அஷ்வின். இந்திய அணியின் நெருக்கடியான நேரங்களில் மிகவும் கூலாக அஷ்வின் பலமுறை செயல்பட்டார்.

பந்து வீச்சில் மட்டுமின்றி, சில ஆட்டங்களில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

வங்கதேச அணியின் மோமினுல் ஹக் மிகச்சிறந்த ஆட்டக்காரர். துரதிருஷ்டவசமாக அஷ்வின் கொடுத்த கேட்ச்சை அவர் பிடிக்க தவறி விட்டார். இதற்கானபேரிழப்பை வங்கதேச அணி எதிர்கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket, R Ashwin