மல்லாக்க படுத்துக்கிட்டு தூங்குறது என்னா சுகம்! மீம்ஸ்களில் ரவி சாஸ்திரியின் புகைப்படம்

ரவி சாஸ்திரி

  • Share this:
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது ரவிசாஸ்திரி தூங்கிய புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. புனே மற்றும் ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்சிஸ் வெற்றி பெற்ற அனைவரதும பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் டெஸ்ட் போட்டியின் நடுவே அவர் அசந்து தூங்கி உள்ளார். இந்த புகைப்படத்தினை  விமர்சித்து பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கேப்டன் விராட் கோலியின் வித்தியாசமான முகவானை கொண்ட புகைப்படத்தை பிசிசிஐ நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தது. இந்த ரியாக்ஷனுக்கு உங்கள் கமெண்ட் என்னவென்றும் கேட்டிருந்தனர். இந்த புகைப்படம் வைரலான நிலையில் தற்போது ரவிசாஸ்திரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Also Read : இளம் வீரருக்கு டிப்ஸ்! ராஞ்சி டிரெஸ்சிங் ரூமில் கெத்து காட்டிய தல 'தோனி'


Also Watch

Published by:Vijay R
First published: