ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது: பிசிசிஐ புதிய திட்டம்!

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

#RaviShastri will have to reapply for head coach | ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் வர விரும்பினால் அவரும் அதற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டியது இருக்கும்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உலகக்கோப்பையை வென்றாலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பதவியை நீட்டிக்க முடியாது என தெரியவந்துள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். இதுதவிர பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என உதவி பயிற்சியாளர்களாக பேட்டிங்கிற்கு சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

  Virat Kohli, Ravi Shastri, ரவி சாஸ்திரி
  விராட் கோலியுடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. (Twitter/RaviShastri)


  கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பயிற்சியாளர்களாக பொறுப்பேற்ற இவர்களின் பதவிக்காலம் வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைகிறது. ரவி சாஸ்திரியின் பயிற்சியின்கீழ் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றியது.

  இந்திய அணி, வரும் உலகக்கோப்பையை வென்றால், அவரே பயிற்சியாளராக தொடர வேண்டும் என கேப்டன் கோலி உள்பட் பெரும்பாலான வீரர்கள் விரும்புவார்கள். ஆனால், பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்ததும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கவோ அல்லது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ முடியாது என தகவல் தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் புதுப்பிப்பது குறித்து எதுவும் இல்லை.

  ரவி சாஸ்திரி, Ravi-Shastri
  பயிற்சியில் கோலியுடன் (இடது) ரவி சாஸ்திரி. (AFP)


  உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் வர விரும்பினால் அவரும் அதற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டியது இருக்கும்.
  ஒருவேளை அவர் விண்ணப்பிக்கவில்லை என்றால், நேர்முகத் தேர்வு மூலம் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்.

  உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு CSK அணி உதவி!

  பேட்ட ஸ்டைலில் தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.. CSK ரசிகர்கள் கொண்டாட்டம்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: