ரவி சாஸ்திரியின் ஊதியம் 20% உயர்வு... எத்தனை கோடி தெரியுமா?

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய அணி 60 ஒரு நாள் போட்டிகளில் 43 வெற்றியும், 21 டெஸ்ட் போட்டிகளில் 13 வெற்றிகளும் 36 டி20 போட்டிகளில் 25 வெற்றிகளும் பெற்றுள்ளது. மேலும்

  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் ஊதியம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021-ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் தலைமையிலான குழு ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராகத் தேர்வு செய்தது.

இந்திய தலைமைப் பயிற்சியாளர்களுக்கானத் தேர்வில் ரவி சாஸ்திரி, மைக் ஹெஸ்ஸன், டாம் மூடி ஆகியோர் இருந்தனர். இவர்களில் ரவி சாஸ்திரியின் தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை படைத்ததால் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய அணி 60 ஒரு நாள் போட்டிகளில் 43 வெற்றியும், 21 டெஸ்ட் போட்டிகளில் 13 வெற்றிகளும் 36 டி20 போட்டிகளில் 25 வெற்றிகளும் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பெற்றதும் சாதனையாக உள்ளது.

ரவி சாஸ்திரி 2021 டி20 உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஒப்பந்தப்படி ரவிசாஸ்திரியின் ஊதியம் ஆண்டுக்கு ரூ.10 கோடி.

இதற்கு முன் அவருக்கு ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தற்போது 20 சதவீதம் உயர்த்தப்பட்டு 10 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இதர பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Vijay R
First published: