இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி!

ரவி சாஸ்திரி

இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே இருப்பார் என தேர்வுக்குழுத் தலைவர் கபில் தேவ் அறிவித்துள்ளார். இதையடுத்து வருகிற 2021-ம் ஆண்டு வரையில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக இருப்பார்.

ரவி சாஸ்திரி உடன் மைக் ஹெஸ்சன், ராபின் சிங், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத் ஆகியோரும் போட்டியில் இருந்தனர். ஆனால், கிரிக்கெட் குறித்த அறிவு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பதவியேற்றதிலிருந்து இந்திய அணி ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் முதலிடம், உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு என சிறப்பாகவே செயல்பட்டு வந்தது.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஒன்பது போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது.

இந்தியா முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ரவி சாஸ்திரியின் காலத்தில்தான். சமீபத்தில்கூட அடுத்த பயிற்சியாளராகவும் ரவி சாஸ்திரியே வர வேண்டும் என விராட் கோலி விருப்பம் தெரிவித்திருந்தார்.

மேலும் பார்க்க: சென்னையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை
Published by:Rahini M
First published: