ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அஸ்வினுக்கு ரவி சாஸ்திரி கொடுத்த விளாசல் சரிதான் - ஈட்டியைப் பாய்ச்சும் முன்னாள் செலக்டர்

அஸ்வினுக்கு ரவி சாஸ்திரி கொடுத்த விளாசல் சரிதான் - ஈட்டியைப் பாய்ச்சும் முன்னாள் செலக்டர்

அஸ்வின்.

அஸ்வின்.

  • Cricketnext
  • 2 minute read
  • Last Updated :

குல்தீப் யாதவ் வெளிநாட்டின் சிறந்த இந்திய ஸ்பின்னர் என்று ரவி சாஸ்திரி கூறியது தன்னை நொறுக்கி விட்டதாக ரவி அஸ்வின் கூறியதற்கு ரவி சாஸ்திரி இறுமாப்பின் உச்சத்தில் ‘அது அஸ்வினை காயப்படுத்தியிருந்தால் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என்று வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்ச, முன்னாள் செலக்டர் சரந்தீப் சிங் அஸ்வின் மீது ஈட்டியைப் பாய்ச்சினார்.

ரவி சாஸ்திரி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சரந்தீப் சிங், அஸ்வின் - ரவிசாஸ்திரி கூறியதை தவறாக புரிந்து கொண்டார். ரவி கூறியது என்னவெனில் குல்தீப் ஒரு வித்தியாசமான பவுலர் இதனால் வெளிநாடுகளில் அவரது சக்சஸ் ரேட் அதிகம். என்ற பொருளில் ரவி சாஸ்திரி கூறியதாகத் தெரிவித்தார்.

“அஸ்வின் தவறாக புரிந்து கொண்டார். நானும் அப்போது இருந்தேன். குல்தீப் யாதவ் பவுலிங் ஸ்டைல் வித்தியாசமானது எனவே வெளிநாடுகளில் அவர் நம்பர் 1 ஸ்பின்னர் என்றுதான் சொன்னார் ரவி சாஸ்திரி. ஆம் சாஸ்திரி சொன்னது சரிதான், அவர் வேலை வெண்ணைத் தடவி பேசுவது அல்ல.

Also Read: Vijay Hazare: கேட்சை விட்டு, பீல்டிங்கில் கோட்டை விட்டு கோப்பையை நழுவ விட்ட தமிழ்நாடு அணி

அஸ்வின் கிரேட் பவுலர், தென் ஆப்பிரிக்காவில் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். அவர் கேம் சேஞ்சர். இது இவர்டைய கடைசி தொடராக இருக்காது, நிச்சயம் அவர் இன்னும் நமக்கு விக்கெட்டுகளைப் பெற்றுக் கொடுப்பார்” என்றார் சரந்தீப் சிங்.

விராட் கோலி குறித்து...

ஒருநாள் கேப்டன்சி விவகாரம், ரோகித் சர்மா, கோலி இடையேயுள்ள பனிப்போர் குறித்து சரந்தீப் சிங் கூறும்போது, “விராட் கோலி மன ரீதியாக நலமாகவே உள்ளார், எனவே அவர் சுதந்திர மனநிலையுடன் ஆடுவார். அவரது பேட்டிங்கை புற விவகாரங்கள் பாதிக்க வாய்ப்பில்லை. அவர் இதுவரை எப்படி பேட் செய்தாரோ அப்படியே இனியும் பேட் செய்வார். அவரிடமிருந்து சதம் எதிர்பார்க்கலாம், நல்ல பேலன்ஸ் ஆன அணியை அவர் வைத்துள்ளார்”

Also Read: தென் ஆப்பிரிக்கா போட்டுக்கொடுத்த ‘தண்ட’பவுலிங்- சதமடித்த ராகுல்- இந்தியா ஆதிக்கம்

சரந்தீப் சிங் வாக்கு பொய்த்துப் போனது, விராட் கோலி 35 ரன்களில் சென்சூரியன் டெஸ்டில் நேற்று வைடு பந்தை அனாவசியமாகத் துரத்தி எட்ஜ் ஆகி வெளியேறினார்.

First published:

Tags: R Ashwin, Ravi Shastri