ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஜடேஜாவை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் 2 முக்கிய வீரர்களை தூக்க சென்னை அணி திட்டம்?

ஜடேஜாவை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் 2 முக்கிய வீரர்களை தூக்க சென்னை அணி திட்டம்?

மாதிரி படம்

மாதிரி படம்

ஜடேஜாவை டெல்லி அணிக்கு டிரேட் ஆப் முறையில் கொடுத்துவிட்டு டெல்லி அணியில் இருக்கும் இரண்டு முக்கியமான வீரர்களை சென்னை அணிக்கு இழுக்க சென்னை அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜடேஜாவை டெல்லி அணிக்கு டிரேட் செய்ய சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்வி காரணமாக அந்த தொடரில் இருந்து சென்னை அணி இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

  இதனையடுத்து தொடரின் பாதியில் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனியே நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காயம் காரணமாக தொடரில் இருந்து அவர் விலகியதாக தகவல் வெளியானது.

  இதனைத் தொடர்ந்து ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சென்னை அணி நிர்வாகம் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார்போல் சென்னை அணியுடன் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கிய ஜடேஜா வரும் சீசனில் வேறு அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தன. இதனால் ரெய்னா போல இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

  இதையும் படிங்க: சமம் என்றாலும் சமம் இல்லை... இந்திய கிரிக்கெட்டில் ஆடவர், மகளிர் இடையே நிலவும் ஊதிய பேதம்

  2023 சீசனுக்காக மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. அதற்கு முன்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் வெளியிட விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் தேவைப்படும் வீரர்களை மற்ற அணிகளுடன் பேசி வாங்குவதற்கான ட்ரேடிங் விண்டோ முறையை ஐபிஎல் நிர்வாகம் ஆரம்பித்துள்ளது.

  இதையும் படிங்க: பிடித்த ஜெர்ஸி நம்பர் என்ன? சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நச் பதில்!

  அதில் 2023 சீசனில் தங்களது அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாட ரவீந்திர ஜடேஜாவை கொடுக்குமாறு டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக தற்போது வெளியாகியுள்ளது. மேலும் சென்னை அணி ஜடேஜாவை கொடுத்துவிட்டு டெல்லி அணியில் உள்ள ஷர்துல் தாகூர் மற்றும் அக்சர் பட்டேல் உள்ளிட்ட இருவரை சென்னை அணிக்கு இழுக்க சென்னை அணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது ஒரு செய்தி இணையத்தில் பரவி வருவதால் சென்னை அணி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai Super Kings, Delhi Capitals, Ravindra jadeja