ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs SA 1st T20- கேட்சை விட்டார் அய்யர், அதற்கான விலையைக் கொடுக்கச் செய்தேன் - வாண்டெர் டஸன்

Ind vs SA 1st T20- கேட்சை விட்டார் அய்யர், அதற்கான விலையைக் கொடுக்கச் செய்தேன் - வாண்டெர் டஸன்

ரசீ வான் டெர் டசன்

ரசீ வான் டெர் டசன்

இந்தியா தோற்றதற்கு யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும் என்றால் அது ஷ்ரேயஸ் அய்யராகத்தான் இருக்க முடியும். அவர் வாண்டெர் டஸன் 30 பந்துகளில் 29 என்று தடவிக்கொண்டிருந்த போது 16வது ஓவரில் ஷ்ரேயஸ் அய்யர் கேட்சை விட்டார், கேட்சஸ் வின் மேட்சஸ் மட்டுமல்ல, கேட்ச் ட்ராப் செய்தால் ஒரு மேட்ச் உட்கார வைக்க வேண்டியதுதான் ஏனெனில் அவர் கேட்சை விட்டதால்தான் நேற்று தென் ஆப்பிரிக்கா வென்றது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தியா தோற்றதற்கு யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும் என்றால் அது ஷ்ரேயஸ் அய்யராகத்தான் இருக்க முடியும். அவர் வாண்டெர் டஸன் 30 பந்துகளில் 29 என்று தடவிக்கொண்டிருந்த போது 16வது ஓவரில் ஷ்ரேயஸ் அய்யர் கேட்சை விட்டார், கேட்சஸ் வின் மேட்சஸ் மட்டுமல்ல, கேட்ச் ட்ராப் செய்தால் ஒரு மேட்ச் உட்கார வைக்க வேண்டியதுதான் ஏனெனில் அவர் கேட்சை விட்டதால்தான் நேற்று தென் ஆப்பிரிக்கா வென்றது.

  30 பந்துகளில் 29 என்று இருந்த வாண்டெர் டஸன் அடுத்த 16 பந்துகளில் 46 ரன்களை விளாசி 46 பந்தில் 75 என்று அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். இவர் இருக்கும் தைரியத்தில் டேவிட் மில்லர் இந்தியப் பந்து வீச்சை ஏறி மிதித்து விளையாடிவிட்டு போய்விட்டார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ லக் இண்டெக்ஸ் கணக்கீட்டின் படி வாண்டெர் டசனுக்கு பதில் வேறு வீரர் இருந்திருந்தால் அந்த இடத்தில் 15 பந்தில் 32 ரன்களை எடுத்திருப்பார், ஆனால் வாண்டர் டசன் 16 பந்தில் 46 எடுத்து விட்டார் என்று கூறுகிறது.

  இந்நிலையில்தான் வாண்டெர் டஸன் கூறும்போது, “ஷ்ரேயஸ் அய்யர் என் கேட்சை விடும்போது முடிவெடுத்தேன், இதற்கான விலையை இந்தியா நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று. அதுதான் நடந்தது” என்றார்.

  மேலும் அவர் கூறும்போது, நான் இன்னிங்ஸை மெதுவாகத் தொடங்குகிறேன் இதனால் அணிக்கு பின்னடைவு என்று என் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது, ஆனால் நான் வேண்டுமென்றே அப்படி ஆடவில்லை, அல்லது நிற்க வேண்டும் என்ற எண்ணமும் சுயநலமும் இல்லை, சில வேளைகளில் ஷாட்கள் மாட்டுவதில்லை என்பதுதான் அதற்குக் காரணம், என்றார்.

  மேலும், “இன்னொரு பாடம் நான் கற்றுக் கொண்டது என்னவெனில் ஒரு பவுலரை ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்து விட்டோம் என்றால் அதோடு விடக்கூடாது தொடர்ந்து அவருக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்பதுதான் கரெக்ட். ஹர்ஷல் படேல் ஓவரில் 22 ரன்கள் என்பது மிக மிக முக்கியமான ஒன்று” என்றார் டசன்.

  இவர் கூறும் காரணங்களை விட ஹர்திக் பாண்டியாவை ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் விளாசிய பிரிட்டோரியஸ் அவரை வீச விடாமல் பவுலிங்கிலிருந்தே தூக்கச் செய்ததுதான் தோல்விக்குக் காரணம் என்று கூறலாம்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs South Africa, T20