ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பேட்டிங், பவுலிங்கில் அசுரத்தனம் காட்டிய ரஷீத் கான்: அயர்லாந்துக்கு ‘ஒயிட்வாஷ்’ கொடுத்த ஆப்கானிஸ்தான்

பேட்டிங், பவுலிங்கில் அசுரத்தனம் காட்டிய ரஷீத் கான்: அயர்லாந்துக்கு ‘ஒயிட்வாஷ்’ கொடுத்த ஆப்கானிஸ்தான்

அயர்லாந்துக்கு 3-0 ஒயிட்வாஷ் அளித்த ஆப்கன். ரஷீத் கான் ஆட்ட நாயகன்.

அயர்லாந்துக்கு 3-0 ஒயிட்வாஷ் அளித்த ஆப்கன். ரஷீத் கான் ஆட்ட நாயகன்.

இந்த வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் 30 புள்ளிகளைப் பெற்றது. மாறாக உலகக்கோப்பைக்கு தானாகவே தகுதி பெறும் வாய்ப்பு அயர்லாந்துக்கு கொஞ்சம் சிக்கலாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தான் அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையே நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்தை ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வென்று ஒயிட்வாஷ் செய்தது. தொடரை 3-0 என்று ஆப்கான் கைப்பற்றியது.

கடைசி போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது இதில் முதலில் பேட் செய்த ஆப்கான் அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டர்லிங் அபாரமாக ஆடி 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 118 ரன்களை எடுத்த போதும் மற்ற வீரர்கள் யாரும் 25 ரன்களை எடுக்கவில்லை என்பதாலும் ரஷீத் கான் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்ததாலும் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தொடரை இழந்துள்ளது.

முன்னதாக பேட்டிங்கிலும் 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசிய ரஷீத் கான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பையின் சூப்பர் லீக் தொடரைச் சேர்ந்ததாகும்.

இந்த வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் 30 புள்ளிகளைப் பெற்றது.

267 ரன்கள் விரட்டலில் பால் ஸ்டர்லிங் தனது 6வது ஒருநாள் இன்னிங்ஸில் 4 வது சதத்தை எடுத்து அபாரமாக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் 14 ஓவர்கள் மீதமிருக்கையில் பால் ஸ்டர்லிங், முஜீப் உர் ரஹ்மான் பந்தில் பவுல்டு ஆக ஆட்டம் தலைகீழாக மாறியது. 187/5லிருந்து ரஷீத் கானின் அபார பந்து வீச்சில் 230 ரன்களுக்கு 47.1 ஓவர்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

பால் ஸ்டர்லிங் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார், பிறகு 101 பந்துகளில் 7 பவுண்டரி 6 சிக்சர்களுடன் சதம் கண்டார். கடைசியில் 118 ரன்களில் ஆட்டமிழந்தது, அயர்லாந்தின் விதியை முடித்து வைத்தது.

முன்னதாக ஆப்கான் அணி முதலில் பேட் செய்த போது 66/4 என்று திணறியது. அயர்லாந்தின் கிரெய்க் யங் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

66/4க்குப் பிறகு கேப்டன் அஸ்கர் ஆப்கான் (41), முகமது நபி (32), ஸ்கோரை 117 ரன்கள் வரை கொண்டு சென்றனர். நபி அப்போது சிமி சிங் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். குல்பதீன் நயீபுடன் சேர்ந்து கேப்டன் அஸ்கர் ஆப்கன் ஸ்கோரை 162 ரன்களுக்குக் கொண்டு சென்றார், அப்போது அஸ்கரும் சிமி சிங்கிடம் வெளியேறினார்.

குல்பதீன் நயீப் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ரஷீத் கானுடன் 8வது விக்கெட்டுக்காக 47 ரன்களைச் சேர்த்தனர், பிறகு ரஷீத் கானும், முஜீப் உர் ரஹ்மானும் (18) சேர்ந்து ஸ்கோரை 210/8-லிருந்து 266 வரை கொண்டு சென்றனர், ரஷீத் கான் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 40 பந்துகளில் 48 ரன்கள் எடுக்க, முஜீப் 18 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். அயர்லாந்து பந்து வீச்சில் கட்டுக்கோப்பு இல்லாததால் உதிரிகள் வகையில் 28 ரன்கள் ஆப்கானுக்குக் கிடைத்தது. ஆப்கான் 266 ரன்கள் எடுக்க அயர்லாந்து நல்ல நிலையிலிருந்து ரஷீத் கானிடம் மடிந்து 230க்கு ஆல் அவுட் ஆகி ஒயிட் வாஷ் தோல்வி கண்டது.

இதனால் உலகக்கோப்பைக்கு தானாகவே தகுதி பெறும் வாய்ப்பு அயர்லாந்துக்கு கொஞ்சம் சிக்கலாகியுள்ளது.

Published by:Muthukumar
First published:

Tags: Afganistan, Cricket, Ireland, Rashid Khan