Home /News /sports /

'வாழ்க்கை ஒரு வட்டம்' - விஜய் பட வசனத்தை நிரூபித்த தல தோனி!

'வாழ்க்கை ஒரு வட்டம்' - விஜய் பட வசனத்தை நிரூபித்த தல தோனி!

சாதனைக்கே பிடித்த சாதனையாளனாக தனது 37 வது வயதிலும் களமாடி வருகிறார் தோனி

சாதனைக்கே பிடித்த சாதனையாளனாக தனது 37 வது வயதிலும் களமாடி வருகிறார் தோனி

ICC World Cup 2019 | India vs Afghanistan | MS Dhoni | ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசிய பந்தை தோனி இறங்கி அடிக்க முயன்ற போது ஸ்டெம்பிங் ஆனார்.

  • News18
  • Last Updated :
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பைத் தொடரின் 28-வது லீக் போட்டி சவுதாம்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய பேஸ்ட்மேன்களில் சொதப்பலான ஆட்டத்ததால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் 5-வது வீரராக களமிறங்கிய எம்.எஸ்.தோனி 52 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். தோனியின் இந்த மோசமான ஆட்டத்தை பலரும் விமர்ச்சித்து வருகின்றனர்.



ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசிய பந்தை தோனி இறங்கி அடிக்க முயன்ற போது ஸ்டெம்பிங் ஆனார். இதன் மூலம் 2011-க்கு பின் தற்போது தான் தோனி ஸ்டெம்பிங் முறையில் அவுட்டாகி உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த மோசமான அவுட்டை தோனி பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.



இந்த போட்டியில் ஆப்கான் வீரர் ரஷித் கான் 14 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் வீசிய பந்தை அடிக்க முயன்றார். ஆனால் ரஷித்கான் பந்தை தவறவிட, அதை லாவகமாக பிடித்த தோனி  ஸ்டெம்பிங் செய்தார்.  ரஷித் கானின் பந்துவீச்சில் ஸ்டெம்பிங்கான தோனி, அவரையே ஸ்டெம்பிங் செய்து பழிக்கு பழி தீர்த்துக் கொண்டார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி