ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

VIDEO: டி-20 போட்டியில் ரஷித் கான் புதிய உலக சாதனை!

VIDEO: டி-20 போட்டியில் ரஷித் கான் புதிய உலக சாதனை!

ரஷித் கான். (ICC)

ரஷித் கான். (ICC)

#RashidKhan becomes first spinner to take T20I hat-trick | அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #AFGvIRE

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சர்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

  ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகின்றன. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

  இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி உத்தரகாண்டில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (பிப்.24) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, முகமது நபி 36 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.

  Afghanistan Cricket Team, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி
  டி-20 கோப்பை உடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. (ICC)

  அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், டி-20 தொடரை 3-0 என ஆப்கானிஸ்தான் தொடரை முழுவதுமாக வென்றது.

  ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

  Rashid Khan, ரஷித் கான்
  ஆக்ரோசமாக பந்துவீசும் ரஷித் கான். (ICC)

  முன்னதாக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒரு நாள் போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  ஆனால், டி-20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை ரஷித் கான் உலக சாதனை படைத்துள்ளார்.

  Also Watch...

  Published by:Murugesan L
  First published:

  Tags: Cricket Records, Rashid Khan, T20