ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இளம் வயதிலேயே ரஷித் கானை தேடிவந்த மிகப்பெரிய பொறுப்பு!

இளம் வயதிலேயே ரஷித் கானை தேடிவந்த மிகப்பெரிய பொறுப்பு!

ரஷித் கான்

ரஷித் கான்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தான் அணியின் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிக்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குப்தின் நெய்ப் தலைமையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறியதை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேப்டனை மாற்றியுள்ளது.

சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுவரும் ரஷித் கான், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று அனைத்து வகையான போட்டிக்கும் ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷித் கான் ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு, ஹைதராபாத் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

20 வயதே ஆகும் ரஷித் கான், தற்போது சர்வதேச கிரிக்கெட் அணியில் இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை தோல்வி - கோலி, ரவி சாஸ்திரியிடம் இந்த கேள்விகளை எழுப்ப சி.ஓ.ஏ திட்டம்

First published:

Tags: ICC Cricket World Cup 2019, Rashid Khan