ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ஜாம்பவான் ராஜேந்தர் கோயல் காலமானார்

ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராஜேந்தர் கோயல் 77-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ஜாம்பவான் ராஜேந்தர் கோயல் காலமானார்
ராஜேந்தர் கோயல்
  • Share this:
ஹரியானா மற்றும் வடக்கு மண்டத்திற்கா உள்ளூர் போட்டிகளில் ராஜேந்தர் கோயல் பங்கேற்றார். ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்ற ராஜேந்தர் கோயல் இடதுக்கை சுழற்பந்து வீச்சாளர்.

ராஜேந்தர் கோயல் 1958 முதல் 1985 வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 750 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஹரியானாவிற்காக 157 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 53 முறை 5 விக்கெட்களும், 17 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

படிக்கசின்னச்சாமி, அன்னலட்சுமிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வரை ஓய்ந்துவிடமாட்டேன் - கவுசல்யா

படிக்கசிறப்புக் கட்டுரை: வெறுத்தவர்களையும் வென்றவர் ‘விஜய்’!


பிசிசிஐ-ன் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். 44 வயது வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கோயல் அதற்கு பின் நடுவராக செயல்பட்டார். இவரது மறைவிற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading