ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சவுராஷ்டிரா அணி, இரண்டாவது முறையாக மகுடம் சூடியது. இந்தியாவில் நடத்தப்படும் முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை தொடர், லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதன் முதல் இன்னிங்சில், பெங்கால் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சவுராஷ்டிரா 404 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 230 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பெங்கால் அணி மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. நான்காம் நாள் ஆட்டத்திலும் சவுராஷ்டிராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய பெங்கால் அணி 241 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதனால், வெறும் 12 ரன்கள் என்ற இலக்குடன் சவுராஷ்டிர அணி களமிறங்கியது. அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற சவுராஷ்டிரா அணி, இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்டது. இப்போட்டியில் இரு இன்னிங்ஸ்களில் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய சவுராஷ்டிரா வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் ஆட்டநாயகனாக தேர்வானார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Ranji Trophy