Home /News /sports /

வட கிழக்கு மாநிலங்களில் பதற்ற நிலை - ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து

வட கிழக்கு மாநிலங்களில் பதற்ற நிலை - ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து

அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் நடைபெற இருந்த ரஞ்சி டிராபிக்கான போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

திரிபுராவில் போராட்டம் கட்டுக்கடங்காமல் எழுந்த நிலையில், இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அசாமின் பல இடங்களிலும் இந்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ரஞ்சி டிராபிக்கான கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தியில்ல் அஷாம் - சர்வீஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற போட்டியும், திரிபுரா - ஜார்கண்ட் அணிகளுக்க இடையே நடைபெற்ற போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், கவுகாத்தியில் நடக்க இருந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Cricket, Ranji Trophy

அடுத்த செய்தி