மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக பெங்களூருவில் நடைபெறும் ரஞ்சி டிராபி 2022 பைனலில் 134 ரன்கள் விளாசிய மும்பையின் சர்பராஸ் கான், தான் கடந்து வந்த பாதையைக் கூறும்போது தன் தந்தையின் பங்களிப்பை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு கண்ணீர் மல்கினார்.
ரஞ்சி இறுதியில் சர்பராஸ் கான் இன்னிங்சினால் மும்பை அணி 374 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிவரும் மத்திய பிரதேசம் தானும் சளைத்தவர்களல்ல என்பதற்கு இணங்க 164/1 என்று அபாரமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். சர்பராஸ் கான் இப்போது இரண்டு தொடர்ச்சியான ரஞ்சி சீசனில் 900 ரன்களைக் கடந்துள்ளார்.
இந்நிலையில் சர்பராஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
என் தந்தை இல்லையெனில் நான் இங்கு இப்போது இல்லை. எங்களிடம் ஒன்றுமில்லாத போது நானும் என் தந்தையும் என் கிரிக்கெட்டுக்காக ரயிலில் பயணம் செய்திருக்கிறோம். நான் கிரிக்கெட் ஆட தொடங்கிய போது மும்பைக்காக ஒரு சதம் அடிக்க வேண்டும் என்று எண்ணினேன். அது நிறைவேறியது.
பிறகு ரஞ்சி பைனலில் ஒரு சதம் எடுக்க வேண்டும் என்பது என் பெருங்கனவு அதுவும் இப்போது நிறைவேறியதில் மகிழ்ச்சி. அதுவும் என் அணிக்கு இந்தச் சதம் தேவைப்படும் போது அடித்தேன் என்பதுதான். அதனால்தான் என் கண்களில் கண்ணீர், நான் உணர்ச்சிவயபட்டுவிட்டேன். ஏனெனில் என் தந்தை என்னுடம் ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார், அதனால்தான் என்னுடைய வெற்றிகளின் பெருமை அவரையே சாரும். அவர் இல்லையெனில் நான் ஒன்றுமேயில்லை. அவர் என்னை விட்டு விடவே இல்லை.
என் தந்தை மகிழ்ச்சியடைந்தார். வாழ்க்கையில் சில கனவுகள் காலமெடுத்தாவது நிறைவேறவே செய்யும். என்னுடைய கடினமான தருணங்களிலிருந்து என்னை மீட்டவர் என் தந்தை.
எனக்கு சதம் எடுக்கும் மனநிலை எப்போதும் உண்டு, அதற்கு நான் குறைந்தது 200 பந்துகள் ஆட வேண்டும். தொடர் சிக்சர்களை அடித்துத்தான் இதை சாதிக்க வேண்டும் என்ற அவசரம் என்னிடம் இல்லை. நிறைய பந்துகள் ஆட ஆட நிறைய ஸ்கோர் அடிப்பேன். பிட்சிற்கும் எதிரணியினரின் திட்டத்திற்கும் ஏற்ப கொஞ்சம் நிதானித்து விட்டேன் என்றால் அதன் பிறகு ரன்கள் தானாக வரும் என்பது எனக்குத் தெரியும்.
இவ்வாறு கூறினார் சர்பராஸ் கான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ranji Trophy