பெங்களூருவில் நடைபெறும் ரஞ்சி டிராபி 2022 இறுதிப் போட்டியின் 2ம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது, மும்பை அணியின் ஸ்டார் பிளேயர் சர்பராஸ் கான் இந்த சீசனில் தன் 4வது சதத்தை எடுத்து 119 ரன்களில் ஆடி வருகிறார்.
இவரது சிறப்பு என்னவெனில் இதுவரை 100 ரன்களைத் தாண்டி ஒரு முறை கூட 150ஐத் தொடாமல் அவுட் ஆனதில்லை. இன்று அடித்தது அவரது பேட்டிங் திறன்படி மெதுவான சதம் 190 பந்துகள் எடுத்துக் கொண்டார். குமார் கார்த்திகேயாவை பவுண்டரி அடித்து சதம் கண்டார்.
இந்த சீசனில் இந்த இன்னிங்ஸ் இன்னும் முடியாத நிலையில் சர்பராஸ் கான் இதுவரை 905 ரன்களை 150.83 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இந்த ரஞ்சி இறுதிப் போட்டிக்கு முன்பாக அவரது ஸ்கோர் இதுதான்: 275, 63, 48, 165, 153, 40, 59*, 50* இப்போது 119 நாட் அவுட்.
A full-throated emotional celebration is the best kind of celebration. Take a bow, Sarfaraz Khan!pic.twitter.com/iaEMdeNGz7
மும்பை அணி உணவு இடைவேளையின் போது 350/8. இன்று இந்த செஷனில் மட்டும் 103 ரன்களை எடுத்துள்ளது. சர்பராஸ் இதுவரை 12 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்துள்ளார் இன்னும் எத்தனை தூரம் மும்பையை கொண்டு செல்வார் என்று தெரியவில்லை. இவருடன் உறுதுணையாக துஷார் தேஷ்பாண்டே 6 ரன்களுடன் கிரீசில் இருக்கிறார்.
மத்தியப் பிரதேச தரப்பில் அவுட்ஸ்விங்கர்களை சொல்லி சொல்லி வீசும் அனுபவ் அகர்வால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சரண் ஜெய்ன், கவுரவ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.