பெங்களூருவில் நடைபெறும் ரஞ்சி டிராபி 2022 இறுதிப் போட்டியில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிராக மும்பை டாஸ் வென்று முதலில் பேட் செய்து முதல் நாள் உணவு இடைவேளையின் போது கேப்டன் பிரித்வி ஷா (47) விக்கெட்டை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 ரன்களுடனும், அர்மான் ஜாஃபர் 14 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். முதல் விக்கெட்டுக்காக பிரித்வி ஷாவும் ஜெய்ஸ்வாலும் 87 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். மத்தியப் பிரதேச அணியின் கேப்டன் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா நெகெட்டிவ் ஆக பீல்ட் செட் அப் செய்தார், அட்டாக்கிங் பீல்ட் செட் அப் இல்லை, அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஸ்பின்னரிடம் கொடுத்தார்.
பிரிதிவி ஷா 79 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் குமார் கார்த்திகேயாவை இறங்கிவந்து அடித்த் சிக்ஸ் மூலம் 47 ரன்கள் எடுத்து வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் பந்தில் பவுல்டு ஆனார், முன் காலை முன்னால் நீட்டி ட்ரைவ் ஆட வேண்டிய பந்தை காலை நகர்த்தாமலேயே ட்ரைவ் ஆட முயன்றார், பந்தின் திசையைக் கோட்டை விட்டு பவுல்டு ஆகி வெளியேறினார்.
பிட்சில் பந்துகள் திரும்புகின்றன, கொஞ்சம் ஸ்பின்னுக்கு பவுன்சும் இருக்கிறது. எனவே லஞ்ச் மற்றும் போகப் போக எப்படி மாறும் என்று சொல்ல முடியாது, மும்பை பயங்கரமான பேட்டிங் வரிசை கொண்டது.
மத்தியப் பிரதேசத்துக்குக் கடினம் தான்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.