முகப்பு /செய்தி /விளையாட்டு / ஒரு கையில் காயம்; இன்னொரு கையால் மட்டுமே பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி… குவியும் பாராட்டு…

ஒரு கையில் காயம்; இன்னொரு கையால் மட்டுமே பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி… குவியும் பாராட்டு…

ஒரு கையால் பேட்டிங் செய்யும் ஹனுமா விஹாரி

ஒரு கையால் பேட்டிங் செய்யும் ஹனுமா விஹாரி

முதல் இன்னிங்ஸில் ஆந்திர அணி 127.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களை குவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஞ்சி கோப்பை தொடரில் ஒரு கையில் காயம் அடைந்த ஹனுமா விஹாரி மற்றொரு கையால் மட்டுமே பேட்டிங் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அர்ப்பணிப்பு உணர்வை கிரிக்கெட் வல்லுனர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான மத்திய பிரதேசம் அணியை ஆந்திர அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ஆந்திர அணியின் கேப்டனாக மூத்த வீரர் ஹனுமா விஹாரி செயல்பட்டு வருகிறார்.

முதல் இன்னிங்ஸில் ஆந்திர அணி 127.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியின்போது இடது கையின் மணிக்கட்டில் கேப்டன் ஹனுமா விஹாரிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கமாக வலது கை ஆட்டக்காரராக விளையாடும் விஹாரி, காயத்தை பொருட்படுத்தாமல் இடது கை ஆட்டக்காரராக மாறி, ஒற்றைக் கையால் பேட் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

ஹனுமா விஹாரி இந்த போட்டியில் 57 பந்துகளை எதிர்கொண்டு 27 ரன்களை எடுத்தார். விக்கெட் கீப்பர் பூய் 149 ரன்களும், கரண் ஷின்டே 110 ரன்களும் எடுத்தனர். தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள மத்திய பிரதேச அணி தற்போது வரை 37ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.

First published:

Tags: Cricket