Home /News /sports /

Ranji 2022: 30 பந்துகளில் 140 ரன்கள்- தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான் ஆவேசம் -194 ரன்கள் குவிப்பு

Ranji 2022: 30 பந்துகளில் 140 ரன்கள்- தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான் ஆவேசம் -194 ரன்கள் குவிப்பு

30 பந்துகளில் 140 ரன்களுடன் 194 ரன்கள்விளாசிய ஷாருக்கான்.

30 பந்துகளில் 140 ரன்களுடன் 194 ரன்கள்விளாசிய ஷாருக்கான்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழ்நாடு வீரர் என்பதாலோ என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் கோட்டை விட்ட அதிரடி மன்னன், வருங்கால இந்திய காட்டடி கிங் ஷாருக்கான் டெல்லி அணிக்கு எதிராக நேற்று 148 பந்துகளில் 20 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 194 ரன்களை விளாசி தமிழ்நாடு அணிக்கு முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுத்தந்தார். டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 452 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணியில் பாபா இந்திரஜித் 117 ரன்கள் எடுத்தார்.

மேலும் படிக்கவும் ...

    3ம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு சிறப்பாக விளையாடியது .குறிப்பாக தமிழ்நாடு அணியின் ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 20 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களுடன் 194 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து 6 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.மேலும் சிறப்பாக விளையாடிய பாபா இந்திரஜித் சதம் அடித்து 117 ரன்களில் ஆட்டமிழந்தார் ,ஜெகதீசன் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் தமிழ்நாடு அணி 494 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது .தற்போது டெல்லிஅணியை விட 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது தமிழ்நாடு.

    வெளுத்துக் கட்டிய ஷாரூக்கான் 89 பந்துகளில் சதம் கண்டார். தனது முதல் ரஞ்சி அல்லது முதல்தர கிரிக்கெட் சதத்தையே இரட்டையாக மாற்றியிருப்பார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக 194 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 பவுண்டரி 10 சிக்ஸ் என்றால் 140 ரன்களை 30 பந்துகளில் விளாசியுள்ளார். முன்பு ரஞ்சி கிரிக்கெட்டில் கீர்த்தி ஆசாத் இப்படித்தான் அடித்து நொறுக்குவார், கபில்தேவ் டெஸ்ட், ஒருநாள் அரங்கில் இப்படி ஆடுவார், ஆகவே நமக்கு இன்னொரு கீர்த்தி ஆசாத், அல்லது இன்னொரு பேட்டிங் கபில்தேவ் கிடைத்துள்ளார்.

    452 ரன்களை எதிர்த்து ஆடிய தமிழ்நாடு அணி 162/5 என்ற நிலையில் ஷாரூக்கான், இந்திரஜித் ஜோடி சேர்ந்தனர். ஷாரூக்கான் இடது கை சீம் பவுலர் குல்தீப் யாதவ்வை புரட்டி எடுத்தார், இவரது 20 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார் ஷாருக். இவரது பெரிய சாதகம் என்னவெனில் வேகப்பந்தை இவருக்கு வீச முடியாது, காட்டு காட்டென்று காட்டி விடுவார், ஒருமுறை பிரசித் கிருஷ்ணா இவரிடம் விஜய் ஹசாரே டிராபியில் சிக்கி சின்னாபின்னமானது கவனிக்கத்தக்கது. ஸ்பின்னுக்கு எதிராக நல்ல டெக்னிக்கை பயன்படுத்துகிறார்.

    லாங்லெக்கில் ஒரு சேஞ்சுக்காக சிங்கிள் தட்டி விட்டு தனக்கென ஒரு சதத்தை எட்டிய பிறகு அவர் தனது வெள்ளை ஜெர்சியை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு முகாமில் இருந்து கைதட்டலில் திளைத்தார். பிறகு ஷாருக் 100-லிருந்து 150 ரன்களை எட்ட 24 பந்துகள் தேவைப்பட்டன. பிறகு 194 ரன்களில் ராணா பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். இவரை சிஎஸ்கே அணி தவறவிட்டதற்காக நிச்சயம் இந்தத் தொடரில் வருந்தும் என்பதோடு, சிஎஸ்கேயின் வயதான வேகப்பந்து வீச்சாளர்களும் வேகமில்லா வேகம் வீசும் தீபக் சாகரும் நிச்சயம் இவரது காட்டடிக்கு தப்ப மாட்டார்கள் என்று நம்புவோமாக.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ranji Trophy, Tamil Nadu

    அடுத்த செய்தி