Ranji Trophy 2022: வரலாறு படைத்த தோனி மாநிலம்: 880 ரன்கள் குவித்த ஜார்கண்ட்- ஈவு இரக்கமற்ற பிட்ச்
Ranji Trophy 2022: வரலாறு படைத்த தோனி மாநிலம்: 880 ரன்கள் குவித்த ஜார்கண்ட்- ஈவு இரக்கமற்ற பிட்ச்
880 ரன்கள் குவித்த ஜார்கண்ட்
திங்களன்று கொல்கத்தாவில் நடந்த ரஞ்சி டிராபியில் 880 ரன்களை எட்டியதன் மூலம் படுமோசமான நாகாலாந்து பவுலிங்கிற்கு எதிராக எதிராக ஜார்க்கண்ட் பேட்டர்கள் கருணை காட்டவில்லை. தோனியின் மாநிலமான ஜார்கண்ட் புதிய ரஞ்சி சாதனை படைத்தது.
திங்களன்று கொல்கத்தாவில் நடந்த ரஞ்சி டிராபியில் 880 ரன்களை எட்டியதன் மூலம் படுமோசமான நாகாலாந்து பவுலிங்கிற்கு எதிராக எதிராக ஜார்க்கண்ட் பேட்டர்கள் கருணை காட்டவில்லை. தோனியின் மாநிலமான ஜார்கண்ட் புதிய ரஞ்சி சாதனை படைத்தது.
ஷாபாஸ் நதீம் ஆட்டமிழக்காமல் 123 ரன்களுடனும், 11-வது இடத்தில் இருந்த ராகுல் சுக்லா 29 ரன்களுடனும் ஓவர்நைட் ஸ்கோரான 769/9 என்ற நிலையில், டிக்ளேர் செய்யாமல் தொடர்ந்து ஆடியது ஆச்சரியமாக இருந்தது. அதோடு ஈவு இரக்கமற்ற ஜார்க்கண்டின் கடைசி ஜோடி 191 ரன்கள் (323 பந்துகளில்) சேர்த்ததால் 203.4 ஓவர்களில் 880 ரன்களைக் குவித்தனர். நாகாலாந்து 4 இன்னிங்ஸ்ட் ஆடினாலும் இந்த ஸ்கோரை ஜென்மத்துக்கும் எட்ட முடியாது, அந்த அணி தன் முதல் இன்னிஞ்ஸில் 229/8 என்று தடுமாறி வருகிறது.
ஷாபாஸ் நதீம் 177 ரன்களையும் நம்பர் 11 வீரர் ராகுல் ஷுக்லா 85 ரன்களையும், எடுத்தனர், முன்னதாக விராட் சிங் 107, குமார் குஷ்காரா 266, என்று வருவோர் போவோர் எல்லாம் சாத்துப்படி வழங்கினர்.
ஜார்க்கண்ட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சதீஷ் சிங், ஈடன் கார்டன் மைதானத்தில் வழங்கப்படுவதை ஒரு "செத்த ஆட்டக்களம்” என்று குறிப்பிட்டார், மேலும் பெங்கால் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டிக்கு முன்னதாக, மிகவும் தேவையான பேட்டிங் பயிற்சியை அவரது தரப்பு வழங்கியதாகக் கூறினார்.
ICYMI: 2⃣6⃣6⃣ off 2⃣6⃣9⃣ with 3⃣7⃣ fours & 2⃣ sixes 👏👏
Jharkhand's Kumar Kushagra set the stage on fire 🔥 🔥 & scored a mighty double hundred. 💪 💪 #RanjiTrophy | #PQF | #JHAvNAG | @Paytm
ஜார்கண்டின் 880 ரன் ரஞ்சியில் 4வது பெரிய ஸ்கோராகும். முன்னர் ஹைதராபாத் 944/6 டிக்ளேர் (ஆந்திரத்திற்கு எதிராக, 1993-94), ஹோல்கர் 912/8 டிக்ளேர் (மைசூர் எதிராக, 1945-46) மற்றும் தமிழ் நாடு 912/6 டிக்ளேர் (எதிர் கோவா 1988-89).
பாகிஸ்தான் செத்த ஆட்டக்களம் போட்டால் கேலி பேசும் நெட்டிசன்கள் உள்நாட்டில் அதுவும் புகழ்பெற்ற டெஸ்ட் மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்த ரஞ்சி சாதனையை நிகழ்த்தியிருப்பதை கேலி செய்வார்களா?
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.