Home /News /sports /

பரிதாப புஜாரா: ரஞ்சி டிராபியிலும் டக் அவுட்- அதிகம் அறியப்படாத பவுலரிடம் அவுட்

பரிதாப புஜாரா: ரஞ்சி டிராபியிலும் டக் அவுட்- அதிகம் அறியப்படாத பவுலரிடம் அவுட்

ரஞ்சியிலும் டக் அவுட் ஆன புஜாரா

ரஞ்சியிலும் டக் அவுட் ஆன புஜாரா

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியைப் பெற்ற சேட்டேஷ்வர் புஜாரா சனிக்கிழமையன்று ரஞ்சி ட்ராபியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 44 முறை சாம்பியனான மும்பை, குரூப் டி ரஞ்சி டிராபி போட்டியில் நடப்பு சாம்பியனான சவுராஷ்டிராவுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்து கூடுதல் புள்ளிகளைப் பெற முயற்சி செய்கிறது.

மேலும் படிக்கவும் ...
    இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியைப் பெற்ற சேட்டேஷ்வர் புஜாரா சனிக்கிழமையன்று ரஞ்சி ட்ராபியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 44 முறை சாம்பியனான மும்பை, குரூப் டி ரஞ்சி டிராபி போட்டியில் நடப்பு சாம்பியனான சவுராஷ்டிராவுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்து கூடுதல் புள்ளிகளைப் பெற முயற்சி செய்கிறது.

    சர்ஃபராஸ் கானின் 275 ரன்கள் அபார இன்னிங்ஸினால் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த மும்பை, பின்னர் அதிகம் அறியப்படாத வேகப்பந்து வீச்சாளர் மோஹித் அவஸ்தி (4/56) மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி (4/55) ஆகியோரால் சவுராஷ்டிராவை 220 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

    ஃபாலோ-ஆன் கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு, சவுராஷ்டிரா இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டம்ப் முடிவில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்களை எட்டியது, தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்னெல் படேல் (64 ரன்), ஹார்விக் தேசாய் (39 பேட்டிங்) ஆகியோர் கிரீஸில் இருந்தனர்.

    அதிகம் அறியப்படாத பவுலர் அவஸ்திக்கு நேற்று மறக்க முடியாத நாலானது. அவர் வந்துஒரு பந்து வீசிய போது புஜாரா ஃபுட்வொர்க் இல்லாததால் கால் காப்பில் வாங்கினார். வெறும் 4 பந்துகள் மட்டுமே ஆடினார் புஜாரா.

    சிறிது நேரம் கிரீரில் இருந்த புஜாராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. , அவஸ்தி இவரை வீழ்த்தியதோடு பின்னர் மிடில் ஆர்டரில் மூத்த வீரர்களான அர்பித் வசவதா மற்றும் பிரேரக் மன்கட் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க சவுராஷ்டிரா இன்னும் 220 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் மும்பை போனஸ் புள்ளிகளுக்காக முயற்சிக்கும்.

    ஆடுகளம் பேட்டிங் செய்ய எளிதானது, இரண்டாவது இன்னிங்ஸில் 30 ஓவர்களில் ஹார்விக் மற்றும் ஸ்னெல் மும்பை பந்துவீச்சாளர்களை வசதியாக விளையாடியபோது, ​​நடப்பு சாம்பியன்கள் புரிந்து கொண்டனர்.

    Also Read: Ranji 2022: 30 பந்துகளில் 140 ரன்கள்- தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான் ஆவேசம் -194 ரன்கள் குவிப்பு

    கடைசி நாளில் 10 சவுராஷ்டிரா விக்கெட்டுகளை வீழ்த்த மும்பை கேப்டன் பிருத்வி ஷாவின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே மும்பையின் வெற்றி அமையும்.

    சுருக்கமான ஸ்கோர்

    மும்பை 544/7 decl (சர்பராஸ் கான் 275, அஜிங்க்யா ரஹானே 129).

    சவுராஷ்டிரா 220 (ஷெல்டன் ஜாக்சன் 61, சேதேஷ்வர் புஜாரா 0, மோஹித் அவஸ்தி 4/56, சாம்ஸ் முலானி 4/55) மற்றும் 105/0 (f/o) (ஸ்னெல் படேல் 64 பேட்டிங்).
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cheteshwar Pujara, Ranji Trophy

    அடுத்த செய்தி