முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘எண்ட் கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க? எனக்கு எண்டே கிடையாது’- ரஞ்சியில் சதமெடுத்த ரஹானே மைண்ட் வாய்ஸ்

‘எண்ட் கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க? எனக்கு எண்டே கிடையாது’- ரஞ்சியில் சதமெடுத்த ரஹானே மைண்ட் வாய்ஸ்

 ரஹானே

ரஹானே

சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி 2022 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் டெஸ்ட் இடத்தை இழக்கப்போவதாக கூறப்படும் அஜிங்கிய ரஹானே சதம் ஏடுத்து தன்னை நிரூபித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி 2022 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் டெஸ்ட் இடத்தை இழக்கப்போவதாக கூறப்படும் அஜிங்கிய ரஹானே சதம் ஏடுத்து தன்னை நிரூபித்துள்ளார்.

அவரது சமீபத்திய சொதப்பல்களினால் அவருக்கு அனைவரும் ‘எண்ட் கார்டு’ போட்டனர், தலைநகரம் படத்தில் வடிவேலு ஒரு வசனம் கூறுவாரே, ‘எண்ட் கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க, எனக்கு எண்டே கிடையாது’ என்று கூறுவார் அது போல் ரஹானே 290 பந்துகளில் 17 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 129 ரன்களை எடுத்தார். இதனையடுத்து இவருடன் ஆடிய சர்பராஸ் கான் என்பவரும் 233 ரன்களுடன் தற்போது அதிரடியாக ஆடிவர பிரிதிவி ஷா கேப்டன்சி செய்யும் மும்பை இதுவரை தன் முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் குவித்துள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு சாதாரண டெஸ்ட் தொடரைக் கொண்டிருந்த ரஹானே, இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததில் ஆறு இன்னிங்ஸ்களில் 136 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் சவுராஷ்ட்ரிஆவுக்கு எதிராக 212 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் தனது சதத்தை எட்டினார்.

இந்த போட்டியில் ரஹானேவுக்கு எதிராக விளையாடும் மற்றொரு போராடி வரும் மூத்த இந்திய வீரர் சேட்டேஷ்வர் புஜாரா, இலங்கைக்கு எதிரான தொடரில் தேசிய தேர்வாளர்கள் அவரைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்ய ஒரு பெரிய ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்.

ரஹானே மற்றும் சர்ஃபராஸ் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்ததால், சௌராஷ்டிரா ஸ்டம்பின் போது தங்கள் அணியை வசதியான நிலையில் வைத்திருந்தது. ரஹானே சுதந்திரமாக விளையாடத் தொடங்குவதற்கு முன் தனது நேரத்தை எடுத்துக் கொண்டு தனது 36வது முதல் தர சதத்தை எட்டினார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் தர்மேந்திரசிங் ஜடேஜாவுக்கு எதிராக ஒரு பெரிய சிக்சருடன் 99 ரன்களை எட்டினார், ஒரு சிங்கிள் எடுத்து சதம் அடித்தார்.

2021 ஆம் ஆண்டில் ரஹானேவின் 479 டெஸ்ட் ரன்களின் சராசரி 20.82 ஆக இருந்தது, இதனையடுத்து தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான துணைக் கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

First published:

Tags: Ajinkya Rahane, Ranji Trophy