இந்திய யு-19, உலகக்கோப்பை வென்ற கேப்டன் மற்றும் டெல்லியின் யாஷ் துல், குவாஹாட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் எடுத்த பிறகு 2வது ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்ததன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ஒன்பதாவது பேட்டர் ஆனார்.
இந்திய யு-19, உலகக்கோப்பை வென்ற கேப்டன் மற்றும் டெல்லியின் யாஷ் துல், குவாஹாட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் எடுத்த பிறகு 2வது ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்ததன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ஒன்பதாவது பேட்டர் ஆனார்.
துருவ் ஷோரே ஆட்டமிழக்காமல் 107 ரன்கள் எடுக்க ஆட்டம் டிராவில் முடிந்தது, 2வது இன்னிங்ஸில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 228 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாளில், ஷாருக் கானின் 148 பந்துகளில் 194 ரன் மற்றும் பாபா இந்திரஜித்தின் 117 ரன்களின் அடிப்படையில் தமிழ்நாடு 42 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்தப் போட்டியில் தமிழ்நாட்டுக்கு 3 புள்ளிகள், டெல்லிக்கு 1 புள்ளி. எலைட் குரூப் எச் பிரிவில் சத்திஸ்கர் முதலிடத்தில் உள்ளது. ஏனெனில் சத்திஸ்கர் அணி ஜார்கண்டை வீழ்த்தியது.
மற்றொரு குரூப் டி எலைட் பிரிவுப் போட்டியில் மும்பை, சவுராஷ்ட்ரா போட்டி ட்ரா ஆனது. மும்பை அணி முதல் இன்னிங்சில் சர்பராஸ் கானின் 275 ரன்களுடனும் ரஹானேயின் 129 ரன்களுடனும் 544/7 என்று டிக்ளேர் செய்ய, முதல் இன்னிங்சில் சவுராஷ்ட்ரா அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு பாலோ ஆன் ஆடியது, அதில் பிட்ச் பேட்டிங் பிட்ச் ஆக மாறியதால் 372/9 என்று விளாசி போட்டியை ட்ரா செய்தது.
இதில் முதல் இன்னிங்ஸில் அவஸ்தி பந்தில் எல்.பி. ஆகி டக் அவுட் ஆன புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸில் பின்னி எடுத்தார், அவர் 83 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார். மும்பை இடது கை ஸ்பின்னர் ஷாம்ஸ் ஜாகிர் முலானி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாலோ ஆன் ஆடிய சவுராஷ்டிரா அணியில் ஹர்விக் தேசாய்- 62, ஸ்னெல் படேல் - 98, சேர்ந்து 163 ரன்களைச் சேர்த்தனர், ஆனால் இருவருமே அடுத்தடுத்து வெளியேறினர். பிறகு புஜாரா எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸ் ஆடி அனைவரையும் அசத்தினார். சர்பராஸ் கான் 275 ரன்களுக்காக ஆட்ட நாயகன் விருது வென்றார். சவுராஷ்டிரா எப்படியோ தோல்வியிலிருந்து தப்பியதற்கு புஜாராவின் அட்டாக்கிங் இன்னிங்ஸ் உதவியுள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.