ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், சவுராஷ்டிர அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. 2022 – 23 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாட பெங்கால் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் தகுதி பெற்றன.
போட்டியில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 54.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷாபாஸ் அகமது 69 ரன்களும், விக்கெட் கீப்பர் அபிஷேக் போரெல் 50 ரன்களும் எடுத்தனர். சவுராஷ்டிரா தரப்பில் கேப்டன உனாட்கட், சேத்தன் சகாரியா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 110 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் 50 ரன்னும், ஜேக்சன் 59 ரன்னும், வசாவடா 81 ரன்னும், சிராக் ஜானி 60 ரன்னும் எடுத்தனர். பெங்கால் அணியின் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து 230 ரன்கள் பின் தங்கிய நிலையில், பெங்கால் அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. நேற்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 53 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்துள்ளது. 61 ரன்கள் பெங்கால் அணி பின் தங்கியுள்ள நிலையில் இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளது. இதனால் சவுராஷ்டிரா அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது களத்தில் பெங்கால் அணியின் கேப்டன மனோஜ் திவாரி 57 ரன்னுடனும், ஷாபாஸ் அகமது 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket