இப்படி ஒரு மொழிப்பெயர்ப்பை பார்த்தது உண்டா! இலங்கை - பாகிஸ்தான் போட்டியில் சுவாரஸ்யம்

இப்படி ஒரு மொழிப்பெயர்ப்பை பார்த்தது உண்டா! இலங்கை - பாகிஸ்தான் போட்டியில் சுவாரஸ்யம்
  • Share this:
இலங்கை வீரர் வாணிந்து ஹசரங்கா பேச்சை மொழிபெயர்ப்பு செய்ய வைத்து, டிரெண்டாகி உள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. ஒரு நாள் போட்டியை 2-0 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பழிதீர்த்து கொண்டது.

ஐசிசி டி20 போட்டி தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. முதலிடத்திலிருக்கும் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இலங்கை அணியிடம் படுதோல்வியடைந்து ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை வீரர் வாணிந்து ஹசரங்கா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருது வென்ற வாணிந்து ஹசரங்காவிடம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பேட்டி எடுத்தார்.

இலங்கை வீரர் வாணிந்து ஹசரங்காவிற்கு சிங்கள மொழி மட்டுமே தெரியும் என்பதால் அவரது பேச்சை மொழிபெயர்ப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது ரமீஸ் ராஜா, உங்களின் பந்துவீச்சிலேயே இந்த தொடர் தான் சிறப்பு வாய்ந்ததா? கேட்டார். அதற்கு அவர் ஆம்(Yes) என்று ஒரு வார்த்தையில் பதிலளித்தார்.


உடனே ரமீஸ் ராஜா மொழிபெயர்ப்பாளிடம் மைக்கை நீட்டி அதை மொழிபெயர்ப்பு செய்யுமாறு கூறினார். அதற்கு அவர் ஆம்(Yes) என்று சொல்லி உள்ளார். இதை எப்படி மொழிபெயர்க்க முடியும் என்பதை உணர்ந்த ரமீஸ் ராஜா சிரித்து கொண்டே அடுத்த கேள்விக்கு போனார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Also Watch : உலகநாடுகள் இந்திய விளையாட்டுத் துறையின்வளர்ச்சியில் கைகோர்க்கவேண்டும்

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading