• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவி அம்பேல்? - மிதாலி ராஜ் நீக்கம் எதிரொலி!

ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவி அம்பேல்? - மிதாலி ராஜ் நீக்கம் எதிரொலி!

மிதாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார்

மிதாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார்

#RameshPowar Unlikely To Get Extension As Women's Team Coach | பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் இன்று (30.11.18) முடிவடைகிறது. #MithaliRaj

  • News18
  • Last Updated :
  • Share this:
    மிதாலி ராஜ், அணியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து மகளிர் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க பிசிசிஐ விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

    மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பவார் (40), ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருந்தார். இந்திய அணிக்காக அவர் விளையாடிய போட்டிகள் 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் ஆட்டங்கள் தான். இவர், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதலில்  தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இவர், மகளிர் டி-20 உலகக்கோப்பை வரை பணியைத் தொடருவார் என்று பிசிசிஐ அறிவித்தது.

    மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி, லீக் போட்டியில் தோல்வியையே  சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில்  தோல்வி அடைந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அந்த போட்டியில் மிதாலி ராஜை ஏன் சேர்க்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    Ramesh Powar, Mithali Raj, BCCI
    பயிற்சியாளர் பவாருடன் மிதாலி ராஜ் (BCCI)


    மிதாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார் ஆகியோர் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர். பவார், பிசிசிஐ உயரதிகாரிகளில் சிலரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னை அணியில் இருந்து நீக்கிவிட்டதாக மிதாலி புகார் கூறினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த பவார், அணியில் மிதாலி ராஜ் பிளவு ஏற்படுத்த முயற்சித்ததாகவும், சுயநலத்தோடு விளையாடியதாகவும் கூறினார். இருவரின் அடுக்கடுக்கான புகார்களால் கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் இன்று (30.11.18) முடிவடைகிறது. அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிதாலி ராஜ் உடனான பிரச்னையால் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. அதனால், பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

    மேலும் பார்க்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: