• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பவார்!

மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பவார்!

ஹர்மன்ப்ரீத் கவுர் (இடது), ரமேஷ் பவார்

ஹர்மன்ப்ரீத் கவுர் (இடது), ரமேஷ் பவார்

#RameshPowar Throws Hat in Ring Again | ஹர்மான்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் ஆதரவு தனக்கு உள்ளது என்று ரமேஷ் பவார் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு ரமேஷ் பவார் மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

அண்மையில் வெஸ்ட் இண்டீசில் நடந்த மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் எந்தவித காரணமும் இன்றி சேர்க்கப்படவில்லை. இந்த விவகாரம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சலசலப்புக்களை ஏற்படுத்தியது.

Ramesh Powar, Mithali Raj, BCCI
பயிற்சியாளர் பவாருடன் மிதாலி ராஜ் (BCCI)


கடந்த 30-ம் தேதியுடன் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்தது. மீண்டும் அவரது ஒப்பந்தத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை. ஆனால், பவார் மீண்டும் பயிற்சியாளராக வேண்டும், டி-20 உலகக் கோப்பைக்கு தயாராக அவரது ஆலோசனை வேண்டும் என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் போர்க்கொடி தூக்கினர்.

புதிய பயிற்சியாளருக்கான தேர்வு டிசம்பர் மாதம் 20-ம் தேதி மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவகலத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் பொறுப்புக்கு மீண்டும் ரமேஷ் பவார் விண்ணப்பித்துள்ளார்.

MithaliRaj | Ramesh Powar
மிதாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார்


பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தது குறித்து ரமேஷ் பவார் பேசுகையில், “ஆம், நான் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளேன். ஏனென்றால் ஸ்மிருதி மந்தனா, ஹர்மான்ப்ரீத் கவுர் ஆகியோர் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதனால் விண்ணப்பிக்காமல் அவர்களை ஏமாற்ற எனக்கு விருப்பமில்லை.” என்று கூறினார்.

Also Watch...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: