பேட்ஸ்மேன்களைத் திணறடித்த சென்னை அணி! 151 ரன்கள் எடுத்த ராஜஸ்தான்

நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

news18
Updated: April 11, 2019, 9:51 PM IST
பேட்ஸ்மேன்களைத் திணறடித்த சென்னை அணி! 151 ரன்கள் எடுத்த ராஜஸ்தான்
நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
news18
Updated: April 11, 2019, 9:51 PM IST
சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 25-வது லீக் போட்டியில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ரஹானே 14 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் 6 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் மட்டும் 28 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 151 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் தீபக் சாஹர், ஷார்துல் தாகுர், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Also see:

First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...