அதிரடி காட்டிய டி காக்.... மும்பை அணி 187 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் தொடரில் தன்னுடைய 8-வது அரை சதத்தை அடித்தார் மும்பை அணி வீரர் டி காக் 

Web Desk | news18
Updated: April 14, 2019, 12:02 PM IST
அதிரடி காட்டிய டி காக்.... மும்பை அணி 187 ரன்கள் குவிப்பு
ஐபிஎல்
Web Desk | news18
Updated: April 14, 2019, 12:02 PM IST
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்துள்ளது.

மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, டி காக் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தபோது ஆர்ச்சர் பந்தில் ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 37 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். இதையடுத்து நிதானமாக விளையாடிய டி காக் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 8-வது அரை சதத்தை அடித்தார்.ஆர்ச்சர் பந்தில் 81 ரன்களுக்கு டி காக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187  ரன்கள் அடித்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், குல்கர்னி, உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Also watch


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...