டி20 உலககோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியில் ஒரே ஒரு பெண் ஊழியராக ராஜ் லக்ஷ்மி அரோரா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் செல்வாக்கான அணியாக உள்ள இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருவது அனைவருக்கும் தெரியும், இந்திய அணியில் ராஜ் லக்ஷ்மி அரோரா என்ற துணைப் பணியாளர் உலகக் கோப்பைக்கு பயணித்துள்ளார். இந்திய அணி உடன் சென்றுள்ள ஒரே ஒரு பெண் இவர் தான்.
தற்போது பிசிசிஐயில் மூத்த ஊடக தயாரிப்பாளராக இருக்கும் ராஜ் லக்ஷ்மி அரோரா ஒவ்வொரு தொடருக்கும் முன்பு இந்திய வீரர்களுக்கும் மீடியாக்களுக்கும் இடையிலான தொடர்பை கவனித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் ராஜ் லக்ஷ்மி அரோரா பிசிசிஐயின் புகார் குழுவின் தலைவராகவும் இருந்தார், இது வீரர்களின் மீதான பாலியல் குற்றாச்சாட்டுகள் உள்ளிட்டவை விசாரிக்கும் குழுவாகும்.
View this post on Instagram
முதலில் எழுத்தாளரக தனது பயணத்தை தொடங்கிய ராஜ் லக்ஷ்மி அரோரா, 2015ஆம் ஆண்டு பிசிசிஐயில் சமூக ஊடக மேலாளராக சேர்ந்து, பின்னர் மூத்த தயாரிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். புனேவில் உள்ள சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் ஊடகப் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார் இவர் ரிவர்டேல் உயர்நிலைப் பள்ளியின் கூடைப்பந்து மற்றும் படப்பிடிப்பு அணிகளில் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்களுடன் வெளியில் சென்றுள்ள ராஜ் லக்ஷ்மி அரோரா அவர்களுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது வைரலாக பரவி யார் இந்த ராஜ் லக்ஷ்மி அரோரா என இணையத்தில் ரசிகர்களை தேட வைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Indian cricket team