கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உள்ளூர் முதல் சர்வதேச வரையிலான அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், கொரோனோ வைரசைக் கட்டுக்குள் கொண்டு வந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை நடத்தத் திட்டமிட்டது. அதன் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது.
Also see:
ஊரடங்கிற்குப் பிறகு தொடங்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால் கொரோனோ வைரசுக்கு எதிராகப் போராடிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட ’கொரோனோ வாரியர்ஸை’ கௌரவிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக இந்த டெஸ்ட் தொடருக்கு ’Raise The Bat’ எனப் பெயர் சூட்டியுள்ளது. அத்துடன் இங்கிலாந்து வீரர்கள் இந்த தொடர் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக திகழ்ந்தவர்களின் பெயர்களை தங்களது டி-சர்டில் பொறிக்கவுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.