இன்றைய போட்டியில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ரெய்னா!

#CSK | #SureshRaina | சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நடப்பு ஐபிஎல் சீசனில் படைத்தார்.

இன்றைய போட்டியில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ரெய்னா!
Suresh Raina, சுரேஷ் ரெய்னா
  • News18
  • Last Updated: April 26, 2019, 7:22 PM IST
  • Share this:
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ள மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மேலும் ஒரு சாதனையை படைக்க சுரேஷ் ரெய்னா காத்திருக்கிறார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணியை வீழ்த்தி 2-வது இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் மும்பை அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Also Read : பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!


சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா ஐ.பி.எல் தொடரில் 5,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நடப்பு ஐ.பி.எல் சீசனில் படைத்தார். இன்றைய மும்பை அணிக்கு எதிராக மேலும் ஒரு சாதனையை அவர் படைக்க அவர் காத்திருக்கிறார்.

Also Read: மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வா?

மும்பை அணிக்கு எதிராக ரெய்னா ஒரு கேட்ச் பிடித்தால்  ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த முதல் வீரர்  என்ற சாதனையை அவர் நிகழ்த்துவார். ரெய்னா இதுவரை 187 ஐ.பி.எல் போட்டிகளில் 99 கேட்ச்கள் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ் 151 ஐபிஎல் போட்டிகளில் 84 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள்

99 - சுரேஷ் ரெய்னா
84 - டிவில்லியர்ஸ்
82 - ரோகித் சர்மா
72 - பொல்லார்டு
71 - விராட் கோலி

Also Watch:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்