ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மழையால் தொடர்ந்து பாதிக்கும் டி20 உலககோப்பை போட்டிகள் : என்ன செய்ய போகிறது ஐசிசி?

மழையால் தொடர்ந்து பாதிக்கும் டி20 உலககோப்பை போட்டிகள் : என்ன செய்ய போகிறது ஐசிசி?

இன்று நடைபெற இருந்த இரண்டு போட்டிகளும் ரத்து

இன்று நடைபெற இருந்த இரண்டு போட்டிகளும் ரத்து

டி20 உலககோப்பை தொடரில் மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டு வருவது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaAustraliaAustraliaAustraliaAustralia

  மழையால் டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டங்கள் இன்று கைவிடப்பட்டுள்ளது.

  8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெர்ல்பேர்ன் மற்றும் ஹோபர்ட் நகரில் பெய்து வரும் மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் 24-ம் தேதி ஹோபர்ட் நகரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, - ஜிம்பாப்வே இடையேயான போட்டி, மழையால் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. எனினும், தென் ஆப்பிரிக்கா 3 ஓவர்கள் மட்டுமே விளையாடிய நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதால், அந்த அணிக்கு வெற்றி பறிபோனது.

  இந்நிலையில், அக்டோபர் 26-ம் தேதி மெர்ல்பேர்ன் நகரில் நடந்த இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், பாதியிலேயே போட்டி நிறுத்தப்பட்டது. இதனால், டக்வெர்த் லீவீஸ் முறைப்படி இங்கிலாந்து அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. அதே நாளில், நடைபெற இருந்த நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

  இதையும் படிங்க: யுவராஜ் சிங் என்னை விட மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்... நெதர்லாந்து வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா பதில்

  இதே போல இன்றும், மெர்ல்பேர்ன் நகரில் மழை தொடர்வதால், ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர் மழையால் இன்று நடைபெற இருந்த இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாந்துள்ளனர்.

  இதன் பின்னர், மெர்ல்பேர்ன் மற்றும் ஹோபார்ட் நகரங்களில் போட்டிகள் இல்லாததால் மழையின் பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மெர்ல்பேர்ன் நகரில் நடைபெறவுள்ளதால் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இதனால் போட்டி மற்றொரு மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Australia vs England, T20 World Cup