Home /News /sports /

எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் காயம் : ராகுல் திவேத்தியா வேதனை

எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் காயம் : ராகுல் திவேத்தியா வேதனை

ராகுல் திவேத்தியா

ராகுல் திவேத்தியா

ஏதோ கண் துடைப்புக்காக ஒருமுறை இந்திய அணிக்குள் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ராகுல் திவேத்தியா பிறகு காரணமில்லாமல் ஒதுக்கப்பட்டு, இப்போது அவரை தேர்வுக்குழு பரிசீலிக்கக் கூட இல்லாமல் ஓரங்கட்டி வருகிறது.

    ஏதோ கண் துடைப்புக்காக ஒருமுறை இந்திய அணிக்குள் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ராகுல் திவேத்தியா பிறகு காரணமில்லாமல் ஒதுக்கப்பட்டு, இப்போது அவரை தேர்வுக்குழு பரிசீலிக்கக் கூட இல்லாமல் ஓரங்கட்டி வருகிறது.

    ஐபிஎல் தொடரில் இவர் பிரமாதமாக பினிஷிங் செய்து கொடுத்து சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்ப போட்டிகளில், இப்போது இந்திய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவை விடவும் அற்புதமாக ஆடி பினிஷிங் செய்து கொடுத்துள்ளார் திவேத்தியா, ஆனால் பாண்டியா கேப்டன், திவேத்தியா பாவம் கண்டுகொள்ளப்பட மாட்டார்.

    இதையடுத்து அவர் செய்த ட்வீட் ஒன்று 10,000 லைக்குகளையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 500க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் ஆகியுள்ளது. பல ட்விட்டர் வாசிகளும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர், ஒருநாள் நீங்கள் அணியில் தேர்வு செய்யப்படுவீர்கள் திவேத்தியா கவலை படாதீர்கள் என்று ட்வீட் செய்து வருகின்றனர். அதில் திவேத்தியா ‘எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் காயம்’ என்று பதிவிட்டுள்ளார்:



    ஐபிஎல் 2020க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டி20ஐ தொடருக்கு திவேத்தியாவுக்கு அழைப்பு வந்தது, ஆனால் அந்த நேரத்தில் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

    ஐபிஎல் 2022ல், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஃபினிஷராக திவேத்தியா அற்புதமாக ஆடினார், கடைசி ஓவரில் இவர் அடித்த சிக்சர்கள் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இதோடு ஹர்ஷல் படேலின் ஸ்லோயர் ஒன்களை எப்படி அடிப்பது என்பதையும் நிரூபித்துக் காட்டியவர் திவேத்தியா.

    ஐபிஎல் 2022 தொடரில் 16 போட்டிகளில், அவர் 31 சராசரி மற்றும் 147.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 217 ரன்கள் எடுத்தார். இந்தியாவும் அயர்லாந்தும் ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் மலாஹைடில் இரண்டு டி20யில் விளையாடுகின்றன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Gujarat Titans, IPL

    அடுத்த செய்தி