ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ராகுல் திராவிட் ‘சார்’ தான் அப்படி ஆடச்சொன்னார்- ஷ்ரேயஸ் அய்யர் மனம் திறப்பு

ராகுல் திராவிட் ‘சார்’ தான் அப்படி ஆடச்சொன்னார்- ஷ்ரேயஸ் அய்யர் மனம் திறப்பு

shreyas Iyer

shreyas Iyer

டிக்ளேர் செய்வது தாமதமாகக் காரணம், 250 ரன்கள் பிளஸ் முதல் இன்னிங்ஸ் முன்னிலை சரியாக இருக்கும் என்றே நினைத்தோம். ஆகவே இப்போது திருப்தி தரும் நிலையில்தான் இருக்கிறோம்.

  • Cricketnext
  • 2 minute read
  • Last Updated :

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் 105 மற்றும் 65 ரன்கள் எடுத்து 170 ரன்களை எடுத்த ஷ்ரேயஸ் அய்யர் முதல் டெஸ்ட்டிலேயே சதம், அரைசதம் எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார். இவரது இந்த இன்னிங்ஸ்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் கொடுத்த விலைமதிப்பில்லா அட்வைஸ்தான் காரணம் என்கிறார் அய்யர்.

கவாஸ்கர் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் இரண்டு அரைசதங்கள் எடுத்தார், ஆனால் ஷ்ரேயஸ் அய்யர் ஒரு சதம், ஒரு அரைசதம் எடுத்தார். ஷ்ரேயஸ் அய்யர் நேற்று களமிறங்கும்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக வீசி வந்தனர்,இந்தியா 41/3 என்று ரகானே, புஜாரா விகெட்டுகளை இழந்து தவித்தது. பிறகு மாயங்க் அகர்வால், ஜடேஜா ஆகியோரை ஒரே ஓவரில் சவுதீ காலி செய்தார். இந்தியா 51/5 என்று தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அய்யர் கூறுகையில் உள்நாட்டு கிரிக்கெட்டை குறிப்பிட்டார், இதே நிலைமையில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் தனக்கு ஆடியதன் அனுபவம் இருக்கிறது என்றார். ராகுல் திராவிட் அப்போது நிறைய பந்துகளை ஆடினால் சரியாகி விடும் என்றார், நிறைய பந்துகளை எதிர்கொள்வதுதான் சக்சஸ் என்பதற்கு முக்கியக் காரணி என்று திராவிட் கூறியதாக அய்யர் தெரிவித்தார்.

“இதே போன்ற சூழ்நிலையில் நான் முன்பும் ஆடியிருக்கிறேன். இந்திய அணிக்காக அல்ல, என்னுடைய ரஞ்சி அணி மும்பைக்காக. அந்த செஷனை விக்கெட் இழக்காமல் முடிக்க வேண்டும், அதிகப் பந்துகளை ஆட வேண்டும் என்பதே மனநிலை, பெரிதாக யோசிக்கவில்லை, அந்தக் கணத்தில் தோன்றியதை ஆடினேன்.

ராகுல் திராவிட் சார், அதிகப் பந்துகளை ஆடுமாறு கூறினார், அதைத்தான் நான் செய்ய உறுதி எடுத்துக் கொண்டேன். இந்திய அணியில் நான் தான் முதலில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம், அரைசதம் எடுக்கும் சாதனையாளன் என்றார்கள், அது ஒரு நல்ல உணர்வுதான், இதை விடவும் முக்கியமானது போட்டியை வெல்ல வேண்டும் என்பதே.

Rahul Sir Told me to Bat as Many Balls as Possible Shreyas Iyer பிட்சில் அதிகமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை, பந்துகள் தாழ்வாக வரத்தொடங்கின. சவாலான இலக்கை அமைக்கவே எண்ணம். ஸ்பின் பவர் இருப்பதால் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” என்றார் அய்யர்.

First published:

Tags: India vs New Zealand, Rahul Dravid, Shreyas Iyer