ராகுல் அபார சதம்; கோலி நம்பிக்கையைக் காப்பாற்றினார், ரிஷப் பந்த் காட்டடி அரைசதம்

ராகுல் அபார சதம்; கோலி நம்பிக்கையைக் காப்பாற்றினார், ரிஷப் பந்த் காட்டடி அரைசதம்

ராகுல் அபார சதம்

புனே ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தனது 5வது ஒருநாள் சதத்தை எடுத்து முடித்தார். ரிஷப் பந்த் 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசித்தள்ளி 59 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

 • Share this:
  புனே ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தனது 5வது ஒருநாள் சதத்தை எடுத்து முடித்தார். ரிஷப் பந்த் 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசித்தள்ளி 59 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

  இருவரும் சேர்ந்து இதுவரை 12 ஓவர்களில் 109 ரன்கள் என்று ஓவருக்கு 9 ரன்கள் வீதம் விளாசி வருகின்றனர், அதுவும் 40வது ஓவரிலிருந்து 44 வது ஓவருக்குள் 64 ரன்களை இருவரும் விளாசினர்.

  கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் விளாசி கோலியின் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளித்தார், இப்போது கோலி இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை அபார சதம் மூலம் நிரூபித்து விட்டார் ராகுல்.

  ராகுல் 112 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 107 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார், இந்திய அணி 44 ஓவர்களில் 267/3 என்று ஆடி வருகிறது.

  கோலி 66 ரன்கள் எடுத்து ரஷித் பந்தில் பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

  ஆனால் முன்னதாக கோலியும் ராகுலும் சேர்ந்து 121 ரன்களைச் சேர்த்து சரிவிலிருந்து மீட்டெடுத்த போது இந்திய அணி 32 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்திருந்தது.

  ராகுல்


  ஆனால் இப்போது கோலி ஆட்டமிழந்த பிறகு கொஞ்சம் நிதானித்த பந்த், ராகுல் ஒரு கட்டத்தில் புகுந்தனர், பந்த் பென் ஸ்டோக்ஸை மட்டும் 3 சிக்சர்கள் விளாசினார், ராகுல் டாம் கரன், பென்ஸ்டோக்ஸ் இருவரையும் சிக்சர்கள் விளாசினார்.

  கடைசியாக ராகுல் 108 ரன்களில் சற்று முன் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார், ரிஷப் பந்த் 61 பேட்டிங். இந்தியா 45 ஓவர்களில் 271/4.

  விராட் கோலி அபார அரைசதம் கிரேம் சாதனையை உடைத்தார்

  முன்னதாக, இன்று 41 ரன்கள் எடுத்தால் கிரேம் ஸ்மித் சாதனையை உடைத்து விடுவார் என்று விராட் கோலி மீது எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கிணங்க கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சாதனையை விராட் கோலி உடைத்து விட்டார்.

  கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 150 ஒருநாள் போட்டிகளில் 5, 416 ரன்கள் எடுத்து சாதனை புரிந்திருந்தார், விராட் கோலி 94 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அவரது ரன்களைக் கடந்து சென்று விட்டார்.

  ஆனால் இதில் நம்பர் 1 கேப்டன் ரிக்கி பாண்டிங்தான், இவர் 234 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக இருந்து 8,497 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

  விராட் கோலி


  நம்பர் 2-வில் தோனி கேப்டனாக 200 ஒருநாள் போட்டிகளில் 6,641 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

  இன்னொரு தொடர்ச்சியான அரைசதம் எடுத்த விராட் கோலி சதமெடுத்த பிறகு ஆதில் ரஷீத் பந்தை ஸ்டேண்ட்சுக்கு அனுப்பி சிக்சர் விளாசி கொண்டாடினார். கடைசியில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.
  Published by:Muthukumar
  First published: