ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதன்முறையாகும். இந்த தோல்வியை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டது. இதையடுத்து முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ஆதரவாக கருத்துகளை வெளியிட்டனர்.
விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், மதத்தின் அடிப்படையில் ஒருவரை விமர்சிப்பது மிகவும் மோசமான செயல் என்று பதவிட்டிருந்தார். இந்நிலையில் ஷமிக்கு ஆதரவாக விராட் கோலி கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அவரது 9 மாத பெண் குழந்தைக்கு சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நாட்டிற்காக பல சாதனைகளையும், வெற்றிகளையும் பெற்று தந்த மிகச் சிறந்த வீரருக்கு இதுப்போன்ற நேரங்களில் தான் நாம் ஆதரவு கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கோலியின் மகள் மீதான அச்சுறுத்தல்கள் குறுத்து நாம் வெட்கப்பட வேண்டும். இந்த அச்சுறுத்தல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளார்களா என விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
Dear Virat,
These people are filled with hate because nobody gives them any love. Forgive them.
இந்த விவகாரம் குறித்த ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘அன்புள்ள விராட் கோலி, இந்த மக்கள் வெறுப்புகளால் நிரம்பியுள்ளவர்கள். ஏனென்றால் யாரும் அவர்களுக்கு அன்பைக் கொடுக்கவில்லை. அவர்களை மன்னித்துவிடுங்கள். அணியைப் பாதுகாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.