சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ்.- ஐ தடை செய்தவர் ஆயிற்றே அவர் பெயரை எப்படி ஸ்டேடியத்துக்கு வைப்பார்கள்: சசி தரூர் கிண்டல்

சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ்.- ஐ தடை செய்தவர் ஆயிற்றே அவர் பெயரை எப்படி ஸ்டேடியத்துக்கு வைப்பார்கள்: சசி தரூர் கிண்டல்

சசி தரூர்.

அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தை நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயர் சூட்டப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர் ஆகியோர் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளனர்.

  • Share this:
    அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தை நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயர் சூட்டப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர் ஆகியோர் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளனர்.

    நேற்று இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கும் முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சர்தார் படேல் ஸ்டேடியமாக இருந்ததை நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயரிட்டார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

    அதுவும் அறிவிப்பேயின்றி திடீரென மோடி பெயர் சூட்டியது பற்றி பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.

    இது தொடர்பாக ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “அருமை! உண்மை எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறது.
    நரேந்திர மோடி ஸ்டேடியம்
    அதானி முனை
    ரிலையன்ஸ் முனை ஜெய்ஷா தொடங்கி வைகிறார்” என்று கடும் கிண்டலடித்துள்ளார்.

    மற்றொரு எம்.பி. சசி தரூர் “அந்த உள்துறை அமைச்சர் (சர்தார் படேல்), தங்களது தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ்.ஐ தடை செய்தவர் என்பதை பாஜக இப்போதுதான் உணர்ந்தது போல் தெரிகிறது” என்று கடும் கிண்டலடித்துள்ளார்.

    63 ஏக்கர்கள் நிலப்பரப்பில் கட்டப்பட்ட அகமதாபாத் ஸ்டேடியம் சுமார் ரூ.800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

    இங்கு 11 பிட்ச்கள் உள்ளன. ஆட்டம் நடைபெறும் பிட்ச்களும் பயிற்சி பிட்ச்களும் உலகிலேயே முதல்முறையாக இங்குதான் போடப்பட்டுள்ளது.

    இந்த மைதானத்தில் சுனில் கவாஸ்கர் தனது 10,000-வது டெஸ்ட் ரன்னை எடுத்தார். கபில்தேவ் தனது 432வது விக்கெட்டைக் கைப்பற்றி உலகில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர் ஆனார். சர் ரிச்சர்ட் ஹாட்லியைக் கடந்து சென்றார்.

    இங்கு மழை பெய்தால் கூட 30 நிமிடங்களில் தண்ணீர் வடிந்து விடும் வடிகால் வசதிகள் உள்ளன. பொதுவாக விளக்குகள் கோபுரமாக இருக்கும்,ஆனால் இங்கு கூரையைச் சுற்றி எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் நிழல்கள் விழாது.
    Published by:Muthukumar
    First published: