இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் டிராவிட்டின் மகன் சமத் இரட்டை சதமடித்து மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சுவர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். வேகப்பந்து மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் இவரை வெளியேற்ற பந்துவீசியே களைப்படைந்த வரலாறுகளும் உள்ளது.
இந்திய அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர், சிறந்த பேட்ஸ்மேன் என பன்முகத் தன்மையை கொண்டவர் ராகுல் டிராவிட். தற்போது இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழியை நிருபிக்கும் வண்ணம் இவரது மகன் சமித் கிரிக்கெட் போட்டிகளில் சாதித்து வருகிறார். டெல்லியில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்து உள்ளார்.
Vice-President’s XI அணயில் இடம்பெற்றிருக்கும் சமித் Dharwad Zone அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதமடித்தார். முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் அடித்த சமித், 2வது இன்னிங்ஸிலும் 94 ரன்கள் விளாசினார். மேலும் பந்துவீச்சில் 3 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்
கடந்த 2015ம் ஆண்டு 12 வயதுக்கு உட்பட்டோருக்கான U-12 தொடரில் 3 அரை சதங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 2016ம் ஆண்டு நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 125 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.