இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரானா ராகுல் டிராவிட் தற்போது அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சமித் மற்றும் அன்வே என இரு மகன்கள் உள்ளனர். இருவருமே இளம் கிரிக்கெட் வீரர்களாக உருவெடுத்து வருகின்றனர். மூத்த மகனான சமித் கர்நாடக U-14 அணிக்கு ஏற்கனவே விளையாடியுள்ளார்.
அந்த வரிசையில் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட்டும் தற்போது கர்நாடகா U-14 அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி விளையாடப் போகிறார். ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு விளையாடி போது விக்கெட் கீப்பராக இருந்து பின்னர் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார். தந்தை ராகுல் டிராவிட்டை போலவே மகன் அன்வேவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து கேப்டன் பொறுப்பை பெற்றுள்ளார் என்பது இதில் கூடுதல் சிறப்பு.
கர்நாடக அணிக்காக அன்வே டிராவிட் பங்கேற்கும் போட்டிகள் ஜனவரி 23 மற்றும் பிப்ரவரி 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மூத்த மகன் சமித் டிராவிட் அவர் விளையாடிய U-14 போட்டியில் அபாரமாக அடி இரட்டை சதமடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதையும் படிங்க: துணிவு பாணியா? ரூ. 98கோடி அபேஸ்.. மோசடியில் பணத்தை இழந்த உசைன் போல்ட்.!
இளைவயர் அன்வேவும் அதேபோல சூப்பர் பெர்பார்மென்ஸ் தருவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது. மறுபுறம் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இலங்கை தொடரை முடித்த கையோடு தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Karnataka, Rahul Dravid